Sivakarthikeyan: மீண்டும் இணையும் டான் கூட்டணி.. எஸ்கே24 படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடனும் வளர்ந்துவரும் இயக்குநர்களுடனும் கூட்டணி அமைத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ம் தேதி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அமரன் படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை ராஜ்குமார் பெரியசாமி பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி கேரக்டர்கள் ரியல்டைம் ஹீரோக்களை அவர்களது வாழ்க்கையை பிரதிபலித்துள்ளன. இந்தப் படத்தில் அவர்கள் முகுந்த் மற்றும் இந்து ரெபெக்கா வர்கிஸாக வாழ்ந்துள்ளதாக பாராட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த வாரத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியான அமரன் படம் தற்போது இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்தப் படம் மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது. படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை ராஜ்குமார் பெரியசாமி மிகச்சிறப்பான வகையில் அனைவரையும் கவரும் வகையில் படமாக்கியுள்ளார். படம் பயோபிக்காக இருந்த போதிலும் படத்தில் காட்டப்பட்டுள்ள முகுந்த் -இந்துவின் காதல், மற்றும் அவர்களின் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப், முகுந்தின் மரணம் போன்றவை அனைத்து தரப்பினரையும் கண்கலங்க செய்துள்ளன.
அமரன் வெற்றிக் கொண்டாட்டம்: இந்தப் படத்தின் வெற்றியை தற்போது அமரன் படக்குழுவினர் மிகச்சிறப்பான வகையில் கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாசுடன் எஸ்கே23 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன், குருவான ஏஆர் முருகதாசுடனும் அவரது உதவி இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமியுடனும் தான் இணைந்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தனது பேட்டியொன்றில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
டான் கூட்டணியை உறுதிசெய்த சிவகார்த்திகேயன்: ஏஆர் முருகதாசுடன் எஸ்கே23 படத்தில் நடித்து முடித்தவுடன் அடுத்ததாக மீண்டும் டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியுடன் எஸ்கே24 படத்தில் தான் இணையவுள்ளது குறித்து அவர் உறுதிப்படுத்தியுள்ளார். டான் படம் சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான நிலையில் சர்வதேச அளவில் 130 கோடி ரூபாய்களை அந்தப் படம் வசூலித்தது. படத்தில் சிவகார்த்திகேயனின் இயல்பான மற்றும் காமெடியான நடிப்பு ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. முதல் படத்திலேயே தன்னுடைய மாஸை டான் படம் மூலம் சிபி சக்ரவர்த்தி நிரூபித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளது.
கோட் பட கிளைமாக்ஸ்: இதேபோல இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாருடனும் இணையவுள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்தப் படங்கள் சுதா கொங்கராவுடனான புறநானூறு படங்களுக்கு முன்னதாகவே நடக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அடுத்தடுத்த சிறப்பான இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து வெற்றிநடை போட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்த செப்டம்பர் மாதத்தில் விஜய்யுடன் கேமியோ கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான கோட் படமும் அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் கிளைமாக்சில் சில நிமிடங்களே அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











