அசத்திட்டீங்க பிரதர்... இயக்குனரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

By

சென்னை: வாழ் படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்ட படம், அருவி. அதிதி பாலன், அஞ்சலி வரதன், கவிதா பாரதி, லட்சுமி கோபாலசாமி உட்பட பலர் நடித்திருந்தனர். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

Actor Sivakarthikeyan congratulate Vaazhl team

இதை அடுத்து, அருண் பிரபு இயக்கியுள்ள படம், வாழ். இதில், அருவி படத்தில் உதவி இயக்குநராக நடித்திருந்த பிரதீப் ஹீரோவாக நடித்துள்ளார். பானு, திவா, யாத்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசை அமைத்துள்ளார். ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஏற்கனவே அவர், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களை தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Actor Sivakarthikeyan congratulate Vaazhl team

இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தனமனை, வெகுவாகப் பாராட்டியுள்ளார். எதிர்பார்த்ததை விட படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று அவரையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X