Actor Sivakarthikeyan: ஸ்ரீலீலாவுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்.. செல்ஃபி வேற எடுத்துருக்காரு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த முன்னணி நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான மாவீரன் மற்றும் இந்த ஆண்டில் பொங்கலையொட்டி கடந்த ஜனவரியில் வெளியான அயலான் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் அமரன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய எஸ்கே23 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் சிறப்பான மார்க்கெட் காணப்படுவதால் அவரது அடுத்தடுத்த படங்கள் ஆந்திரா, தெலங்கானாவில் ரிலீசாகி வருகின்றன. அவருக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தொடர்ந்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மாஸ் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan dance with Actress Sree Leela in College cultural event

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர். மெரினா உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய இவர் தனுஷுடன் இணைந்து 3 படத்திலும் தன்னுடைய பாடி லேங்குவேஜால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்பட ஹீரோவாக மாறியுள்ளார். கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் மற்றும் இந்த ஆண்டில் பொங்கலையொட்டி கடந்த ஜனவரியில் வெளியான அயலான் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன.

ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன்: இந்தப் படங்களை தொடர்ந்து ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்துள்ள நிலையில், படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சாய் பல்லவி ஜோடியாகியுள்ளார். படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் காமெடி இல்லாமல் அவர் ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே நடித்துள்ளதாகவும் படத்தின் கதைக்களம் அழுத்தமானதாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்: அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாக தொடர்ந்து இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தன்னுடைய படங்களின் பிரமோஷன்கள் உள்ளிட்டவை மட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் அவரை பார்க்க முடிகிறது. சக நடிகர்கள் மற்றும் அவர்களது படங்களையும் பாராட்ட அவர் தவறுவதில்லை. இந்நிலையில் திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு பேசியது அனைவரையும் கவரும்வகையில் அமைந்தது. அவர் தெலுங்கிலும் பேசிய நிலையில் நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்ரீலீலா, அவர் சரியாக பேசியதாக தலையசைத்தது அனைவரையும் கவர்ந்தது.

சிவகார்த்திகேயன் -ஸ்ரீலீலா ஆட்டம்: முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னுடைய நற்பணி மன்றங்கள் குறித்தும் பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மைனா நந்தினியின் கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னுடைய நற்பணி மன்றங்கள் தொடர்ந்து நற்பணி மன்றங்களாகவே இருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். அதுதான் அனைவருக்கும் நல்லது என்றும் கூறினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீலீலாவுடன் இணைந்து அடுத்தடுத்த பாடல்களுக்கு நடினமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ஸ்ரீலீலா, மைனா நந்தினி உள்ளிட்டவர்களுடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X