அஜித்தின் 'ஏகே 61' படத்துடன் மோதும்.. சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பிரின்ஸ்'திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Recommended Video
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் டான். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதற்கு முன் வெளியான டாக்டர் படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பிரின்ஸ்
சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கு பிரின்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

கலகலப்பான வீடியோ
இந்நிலையில், ‘பிரின்ஸ்'திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை கலகலப்பான வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில், இயக்குநர் அனுதீப், சிவகார்த்திகேயன்,படத்தின் நாயகி மரியா, சத்யராஜ் ஆகியோர் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு பேசியுள்ளனர். அதில், பிரின்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழியில் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 24ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்துடன் மோத ரெடி
அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்றவாறு படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அஜித்துடன் சிவகார்த்திகேயன் நேரடியாக மோத உள்ளார்.

படு பிஸி
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 5 புதிய திரைப்படத்தை கைவசம் வைத்து இருக்கிறார். அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை, ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலா ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில்
அது மட்டும் இல்லாமல் சென்னை-28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











