Sivakarthikeyan: அமரன் டீமிற்கு பிரியாணி ட்ரீட் கொடுத்த சிவகார்த்திகேயன்.. பீஸை தேடி தேடி போடுறாரே!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள சூழலில் நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் படத்தை தயாரித்துள்ளார்.
படத்தில் ராணுவ உயரதிகாரியாக முதல்முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் களமிறங்கியுள்ளார். இந்த படத்தின் அதிகபட்ச காட்சிகள் காஷ்மீரின் பனிப்படர்ந்த சூழலில் அதிகமான ரிஸ்க்குடன் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ வீரராக நடித்துள்ள படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. ராணுவ உயரதிகாரியாக முகுந்தன் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடித்துள்ள சூழலில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரின் பனிபடர்ந்த இடங்களில் மிகுந்த ரிஸ்க்குடன் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் பிரியாணி ட்ரீட்: இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில் தற்போது அமரன் பட குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். அவர் பட குழுவினருக்கு தன்னுடைய கையாலேயே பிரியாணி பரிமாறிய வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி ஜோடியாக இணைந்து நடித்துள்ளார். படத்தின் சூட்டிங் காஷ்மீர், பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ள சூழலில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த அப்டேட்களுக்கு வெயிட்டிங்: இடையில் சில நாட்கள் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய எஸ்கே 23 படத்தில் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்திருந்த சிவகார்த்திகேயன், அந்த படத்திலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு தற்போது அமரன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து சூட்டிங்கை நிறைவு செய்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வரும் சூழலில் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்ட அப்டேட்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
ராணுவ வீரராக சிவகார்த்திகேயன்: கடந்த ஜனவரியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 1992ம் ஆண்டில் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியானது அமரன் படம். அந்தப் படத்தின் டைட்டிலையே தற்பேது சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











