Amaran: அமரன் படத்தின் கிரேட் சக்சஸ்.. ஜிவி பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை மேற்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது வெற்றி கொண்டாட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படத்தின் சிறப்புகளில் ஒன்றாக ஜிவி பிரகாஷின் இசையும் அமைந்துள்ளது. இந்நிலையில் அவரது இசைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு பரிசாக அளித்துள்ளார். இது குறித்து ஜிவி பிரகாஷ் தன்னுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன். சாய்பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 31ம் தேதி வெளியான அமரன் படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது. கடந்த 9 தினங்களில் இந்த படத்தின் வசூல் 193 கோடியாக உள்ளது. இன்றும் நாளையும் வார இறுதி நாட்களையொட்டி இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே இந்த படத்தின் வசூல் கடந்த 9 நாட்களில் 88 கோடிகளாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட அமரன் படக்குழுவினர் தொடர்ந்து வெற்றி கொண்டாட்டங்களாக கொண்டாடி வருகின்றனர்.
அமரன் வெற்றிக் கொண்டாட்டம்: சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அமரன் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை டீம் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அடுத்தடுத்து இந்த படத்தை பிரமோட் செய்ய சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மும்பையிலும் ரசிகர்களை சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அமரன் டீம் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கியுள்ள நிலையில் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனிடையே, அமரன் படத்தின் ஆத்மாவாக அவரது இசை அமைந்துள்ளது.
ஜிவி பிரகாஷ்குமார் இசை: பல உணர்வுபூர்வமான காட்சிகளை ரசிகர்களிடம் எளிதாக ஜிவி பிரகாஷின் இசை கொண்டு சேர்த்துள்ளது. படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு சிறப்பாக பொருந்தும் வகையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கடைசி கட்டம் வரை ஒரு பிரஷர் தனக்கு இருந்ததாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதையை கேட்ட உடனேயே தனக்கு பிடித்து விட்டதாகவும் அதை சிறப்பாக இசை மூலம் கொடுக்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் ஜிவி பிரகாஷ் தன்னுடைய பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷுக்கு காஸ்ட்லி கிஃப்ட்: இந்நிலையில் ஜிவி பிரகாஷின் இந்த ஆத்மார்த்தமான இசைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவருக்கு காஸ்ட்லியான கிஃப்ட்டை நடிகர் சிவகார்த்திகேயன் பரிசாக கொடுத்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வாட்சின் விலை 1.42 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாட்சின் புகைப்படத்தை ஜிவி பிரகாஷ் தனது பதிவில் வெளியிட்டு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











