Amaran: ரஜினி, கமல், விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன்தான்.. சாதனைகளை தொடரும் அமரன் படம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பான் இந்தியா படமாக வெளியான அமரன் படம் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மும்பை ரசிகர்களையும் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து கடந்த 12 நாட்களில் இந்த படம் 250 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வசூல் சாதனை செய்துவருவதால் ஓடிடியில் வெளியாகும் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

sivakarthikeyan amaran movie tamil cinema

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் கடந்த மாதம் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் தீபாவளி கொண்டாட்டமாக ரிலீசான நிலையில் தொடர்ந்து படம் சர்வதேச அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்துடன் போட்டியிட்ட பிரதர், பிளடி பெக்கர், லக்கி பாஸ்கர் படங்களை ஓரங்கட்டி விட்டு வசூலிலும் வரவேற்பிலும் மாஸ் காட்டி வருகிறது அமரன். இதில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் மட்டும் சிறப்பாக அமைந்து வருகிறது. முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ள அமரன் படம் அதன் மேக்கிங் மற்றும் திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அமரன் படம்: அமரன் படத்திற்காக இதன் எழுத்துக்களுக்காக ஏறக்குறைய ஆறு ஆண்டுகளை செலவழித்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படம் இவருக்கு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்ததாக தனுஷின் படத்தை இயக்கவும் அவர் கமிட்டாகியுள்ளார். இதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமரன் 2 படம் வருமா என்ற கேள்விக்கு வரும் என்றும் ஆனால் அதற்கான எழுத்தை மேற்கொள்ள காலங்கள் பிடிக்கும் என்றும் ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படம் சர்வதேச அளவில் கடந்த 12 ஆண்டு நாட்களில் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது.

12 நாட்களில் அமரன் வசூல்: படம் தற்போது 250 கோடிகளை தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 120 கோடி ரூபாய் வசூலை அமரன் படம் தாண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, முன்னதாக தமிழில் 250 கோடி கிளப்பில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் படங்கள் மட்டுமே இணைந்திருந்த நிலையில் தற்போது அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். அவரது இந்த வளர்ச்சி மிகச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியான விஜயின் கோட் படத்தில் சில காட்சிகளில் தோன்றியிருந்தார் சிவகார்த்திகேயன். இதில் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கைகளில் விஜய் கொடுப்பதாக காட்சிகள் அமைந்திருந்தன.

அடுத்தடுத்த படங்கள்: இதில் துப்பாக்கி என்பது கோலிவுட்டின் குறியீடாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு அந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தன்னை முதல் முதலாக 100 கோடி கிளப்பில் இணைத்திருந்த சிபி சக்கரவர்த்தி மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் மீண்டும் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சுதா கொங்கராவின் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.

வசூல் சாதனை செய்துவரும் அமரன்: அடுத்தடுத்த இந்த படங்கள் அவரது கேரியரில் பெஸ்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அவரது அமரன் படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது அவரது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப்படம் வசூலில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை பீட் செய்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X