அருண் விஜய்யை பார்த்து டார்ச்சர் பண்ணாத.. ஜிம் ட்ரெயினரிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த கவனிக்கத்தக்க படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் கொடுத்துள்ளது. சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி இணைந்து நடித்திருந்த இந்தப் படம் சர்வதேச அளவில் 300 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு மதராஸி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த இயக்குநர்களின் படங்களில் அவர் இணைந்து வருகிறார்.

Sivakarthikeyan Arun Vijay tamil cinema

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷுடன் இணைந்து 3 படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். முன்னதாக விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்திருந்தார். இந்த பிரபலமே அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. முதல் படத்தில் காமெடியனாக இணைந்திருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக இணைந்து மாஸ் காட்டினார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் காமெடியை மையமாக கொண்டு நடித்திருந்தார். நடிகராக, தயாரிப்பாளராக பல்வேறு போராட்டங்களை சந்தித்த சிவகார்த்திகேயன் தற்போது அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறியுள்ளார்.

அமரன் படம்: அந்த வகையில் கடந்த ஆண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான அமரன் படம் சிவகார்த்திகேயன் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு கதைக்களமாக பேசப்பட்ட நிலையில், சாய் பல்லவியின் நடிப்பும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 320 கோடிகளை தாண்டி வசூலித்தது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறர். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்க்கு பாராட்டு: மதராஸி என்று எஸ்கே23 படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ரிலீசை எதிர்பார்க்கலாம். இதனிடையே அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தி திணிப்பை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ரவி மோகன் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய பேச்சு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிம் ட்ரெயினரிடம் கட் அண்ட் ரைட்: அருண் விஜய் எப்போதுமே தன்னுடைய பிட்னசில் அதிகமான ஆர்வம் காட்டுபவர். சிவகார்த்திகேயனும் அமரன் படத்தில் ராணுவ வீரராக சிறப்பான பிட்னசை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தனக்கும் அருண் விஜய்க்கும் ஒரே பிட்னஸ் ட்ரெயினர்தான் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். முன்னதாக அருண் விஜய்யின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை பார்த்ததாகவும் டம்பல்சை வேகமாக செய்து தூக்கிப் போட்டுவிட்டு சென்றதை பார்த்த தான், தன்னுடைய பிட்னஸ் ட்ரெயினருக்கு இந்த வீடியோவை அனுப்பி, அவரை பார்த்து தன்னையும் இதுபோல செய்யுமாறு டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று தான் கூறியதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான செயல்பாடு: சக நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை மேடையேறி வாழ்த்துவது தற்போதைய நடிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதேபோல மற்ற நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோக்களும் தற்காலங்களில் அதிகரித்துள்ளனர். இந்த வரிசையில் அருண் விஜய் அஜித்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் இட்லி கடை படத்தில் வில்லனாகியுள்ளார் அருண் விஜய். இதேபோல சிவகார்த்திகேயனுக்கு வில்லனபாக பராசக்தி படத்தில் ரவி மோகன் இணைந்துள்ளார். முன்னதாக நடிகர் விஜய் சேதுபதியும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். இது ஆரோக்கியமாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X