சிம்பு சூப்பர்… எஸ்ஜே சூர்யா தெறிச்சிட்டாரு… சிவா பாராட்ட பாருங்க!
சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா மிரட்டலான நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது மாநாடு படம்.
Recommended Video
இந்தப் படம் சிறப்பான வசூலையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் சிம்பு, எஸ்ஜே சூர்யாவின் நடிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

மாநாடு படம்
நடிகர் சிம்பு எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு, இந்தப் படம் நேற்று முன்தினம் மிகுந்த போராட்டங்களுக்கு பின்பு வெளியாகியுள்ளது. இறுதிவரை இந்தப் படம் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. ஆனால் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்களும் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

டைம் லூப் படம்
டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் வித்தியாசமான திரைக்கதையுடன் சிறப்பான வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் விருப்பதையும் எதிர்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்துள்ளது. படத்தில் அனைத்து நடிகர்களும் போட்டிப் போட்டு நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்தாலும் படம் தற்போதைய சூழலுக்கும் பொருந்தும்வகையில் அமைந்துள்ளது.

நல்ல வசூல்
இரண்டு தினங்களிலேயே நலல கலெக்ஷனையும் படம் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்திற்கு சக நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல நடிகர் சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பாராட்டு
மாநாடு படத்தை பார்த்து முழுமையாக என்ஜாய் செய்ததாக அவர் கூறியுள்ளார். டீம் அனைவரும் தங்களது முழுமையான உழைப்பை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெங்கட் பிரபு தனது சிறப்பான டைரக்ஷனை கொடுத்துள்ளதாகவும் சிம்பு சூப்பர் என்றும் எஸ்ஜே சூர்யா தெறிக்க விட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.யுவனின் பிஜிஎம்மும் சூப்பர் என்றும் கூறியுள்ளார்.

தொடர் பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயன் சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் படைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவும் பாராட்டுகளும் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். படத்தின் வெற்றிக்கான வாழ்த்துக்களையும் அவர் கூறி வருகிறார். மேலும் இளம் இயக்குநர்களையும் அவர் ஊக்குவித்து வருகிறார்.

மாநாடு படத்திற்கு ஊக்குவிப்பு
மாநாடு படம் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பாக ஓடி வரும் நிலையில் வெற்றி நாயகனான நடிகர் சிவகார்த்திகேயனின் பாராட்டு மற்றும் வாழ்த்து மாநாடு படத்திற்கு மேலும் ஊக்குவிப்பாக அமையும். படத்தை வெளியிட தயாரிப்பாளர் மேற்கொண்ட மெனக்கெடல்களுக்கான பலனை அவர் வெற்றியாக தற்போது அனுபவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











