Sivakarthikeyan: ஆர்த்தி மேல அது ரொம்பவே அதிகமாகியிருக்கு.. சிவகார்த்திகேயன் சொல்றதை பார்த்தா!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தின் வசூல் 200 கோடி ரூபாய்களை தாண்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இந்த படத்தை காண திரையரங்குகளில் வார நாட்களிலும் ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து அமரன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக அதிகமான புரமோஷன்களில் முன்னதாக சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் இணைந்து ஈடுபட்டிருந்தார். தற்போது படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் பிரமோஷனுக்காக மும்பையில் சென்று ரசிகர்களை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படம் தற்போது இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது. ஒரே வாரத்தில் இந்த படம் 200 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில் படத்தின் வசூல் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி தவிர்த்து மற்ற அனைவரையும் புது முகங்களாக தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
அமரன் படம்: குறிப்பாக இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து 80 நாட்கள் காஷ்மீரில் நடத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு உமைர் உள்ளிட்ட பல நடிகர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் ராஜ்குமார். இந்த படத்தின் அதிகமான பிரமோஷன்களில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஈடுபட்டார். நடிகர் கமல்ஹாசன், சாய் பல்லவி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட பலரும் இந்த பிரமோஷன்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர். தற்போது இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் அறுவடை செய்து வருகின்றனர். சென்னையில் மட்டுமில்லாமல் ஐதராபாத்திலும் இந்த படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் அமரன் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: படத்தின் ரிலீசை தொடர்ந்தும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்துள்ளனர். அடுத்தடுத்த பேட்டிகளையும் சிவகார்த்திகேயன் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அமரன் படத்தை பற்றி மட்டுமில்லாமல் தன்னுடைய அடுத்தடுத்த பிராஜெக்ட்கள் குறித்தும் அவர் உறுதி செய்து வருகிறார். தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் ஆகியோருடன் இணையவுள்ளது குறித்து உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படங்கள் சுதா கொங்கராவின் புறநானூறு படத்திற்கு முன்னதாகவே எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆர்த்தி குறித்து சிவகார்த்திகேயன்: இந்நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தை பிறந்த பின்பு தன்னுடைய மனைவி ஆர்த்திமீது அதிகமான மரியாதை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய மூத்த மகள் ஆராதனா மதுரையில் பிறந்த நிலையில் தான் விமானம் பிடித்து செல்வதற்குள் அவர் பிறந்துவிட்டதாகவும் ஆனால் தற்போது மூன்றாவது குழந்தை பிறப்பை தான் அருகில் இருந்து பார்த்ததால் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது குறித்து தனக்கு தெரிய வந்ததாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் கஷ்டம்: அம்மாவை ஏன் தெய்வத்திற்கு இணையாக நாம் பேசுகிறோம் என்பது குறித்து தற்போது தனக்கு தெரியவந்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தன்னுடைய அம்மா மீது மிகுந்த பாசம் உள்ள நிலையில், அவர் தன்னை பெறுவதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது குறித்தும் தற்போது தெரிந்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











