Sivakarthikeyan: அமரன் வெற்றி துவங்கிய தருணம்.. உலகநாயகனுக்கு பாராட்டு சொன்ன சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக களமிறங்கியுள்ள அமரன் படம் நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியான நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகச் சிறப்பான வெற்றியாக மாற்றியுள்ளனர். சிவகார்த்திகேயனுடன் படத்தில் அவரது மனைவியாகவும் காதலியாகவும் நடித்துள்ள சாய் பல்லவியும் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளார்.
அமரன் படம் முதல் நாளிலேயே மிகச் சிறப்பான வசூலை பெற்றுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய உற்சாகத்தை மற்றும் நன்றியை பதிவு செய்திருந்தார். நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உறுதியாகியுள்ளதாக அவர் கூறியிருந்தார். இன்னிலையில் அவரது பதிவிற்கு சிவகார்த்திகேயனும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகி ரசிகர்களை உண்மையான கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த படத்தில் ராணுவ மேஜராக சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது ஜோடியாக இந்த ரெபெக்கா வர்கீஸாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இவர்களின் காம்பினேஷன் மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இருவரும் தங்களது போட்டி போட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் அதற்கு சிறப்பான மதிப்பளித்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.
அமரன் வசூல்: முதல் நாளிலேயே 42.3 ரூபாய்களை இந்த படம் சர்வதேச அளவில் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை நேற்றைய தினமும் படத்தின் வசூல் எண்ணிக்கை தாறுமாறாக அமைந்துள்ளது. இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன். இந்த படம் குறித்து கமல்ஹாசன் தன்னுடைய உற்சாகத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் என்ற தனது நம்பிக்கை உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சிவகார்த்திகேயனும் கமெண்ட் செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பாராட்டு: உலகநாயகன் கமல்ஹாசன் என்று கூப்பிட்டு பேசியுள்ள சிவகார்த்திகேயன், இந்தப் படத்தின் ரிலீஸ் நாளில் தன்னை தொலைபேசியில் அழைத்து பேசிய கமல், மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தபோது இந்த அமரன் படத்தின் வெற்றி துவங்கியுள்ளதாக கூறியுள்ளார். கமலின் இந்த நம்பிக்கை மற்றும் அன்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், மீண்டும் ஒருமுறை நன்றி என்றும் கூறியுள்ளார். அமரன் படம் முகுந்த் வரதராஜனின் பயோ பிக்காக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் கேரக்டர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
வசூலில் சாதனை: மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது அமரன் படம். இந்தப் படத்தின் இரண்டு நாட்களின் வசூல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 60 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. படம் 100 கோடி கிளப்பை தாண்டி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் பான் இந்தியா படமாக வெளியான நிலையில், தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப்படம் சிவகார்த்திகேயனை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தியுள்ளது. அவருக்கு நடிக்கவும் தெரியும் என்பதை கூறும்வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











