Sivakarthikeyan: மனைவியை பயமுறுத்திய சிவகார்த்திகேயன்.. அட இந்த கெட்டப்புலயா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து 3வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் வசூல் 250 கோடிகளை தாண்டி உள்ள நிலையில் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரைப்படம் ஓடி வருகிறது.

இன்றைய தினம் சூர்யாவின் பிரம்மாண்ட படைப்பாக கங்குவா படம் ரிலீசாகியுள்ள நிலையிலும் அமரன் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கையை குறையாமல் உள்ளன. இதனால் இந்த படம் அடுத்தடுத்த நாட்களில் மேலும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த வசூல் சாதனையால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

sivakarthikeyan amaran movie aarthi

அமரன் படம்: நடிகர் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக கலக்கியுள்ள படம் அமரன். இந்த படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களின் கல்லூரி வாழ்க்கை மற்றும் அதையொட்டிய காதல் மிகப்பெரிய அளவில் அமரன் படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இறுதியில் ராணுவ மேஜராக சிவகார்த்திகேயன் உயிரிழக்கும் போது இவர்களின் காதலே அந்த காட்சிக்கு மிகப்பெரிய அளவில் பலத்தை கொடுத்துள்ளது. அந்த வகையில் அமரன் படம் சிறப்பான அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது 3வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்: இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டு உள்ளது தெரிய வருகிறது. ராணுவ மேஜராக அவர் தன்னுடைய உடல்கட்டை மிகச் சிறப்பாக அமைத்துக் கொண்டுள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் முகுந்தாகவே சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இதேபோல அவரது காதலி மற்றும் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸாக நடித்துள்ள சாய் பல்லவியும் அந்த கேரக்டராகவே மாறி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பட குழுவினருக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை அளித்துள்ளது.

ஆர்த்தியை பயமுறுத்திய சிவகார்த்திகேயன்: 3வது வாரத்திலும் இந்த படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவே உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் சூர்யாவின் கங்குவா ரிலீசுக்கு பிறகும் அமரன் படத்தின் தாக்கம் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ள நிலையில், திரையரங்குகளின் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை முகுந்ந் வரதராஜன் கெட்டப்பில் சென்று பயமுறுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பெருமையாக பேசிய சிவகார்த்திகேயன்: சமையலறையில் ஆர்த்தி ஏதோ வேலையில் திரும்பியபடி ஈடுபட்டுக் கொண்டிருக்க, முகுந்ந் வரதராஜன் கெட்டப்பில் பின்னால் சென்று அவருக்கு தெரியாமல் நின்றுக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏதோ தெரிந்து ஆர்த்தி திரும்பிய நிலையில் இவரைப் பார்த்து அதிர்ச்சி அடைவதாகவும் பின்னர் விஷயத்தை தெரிந்து கொண்டு சிரித்தபடி இவரை பிடித்து தள்ளி விடுவதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதிக்கு 3வது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தன்னுடைய மனைவியின் பிரசவம் உள்ளிட்ட வலிகளை தான் இந்த குழந்தை பிறப்பின்போதுதான் அறிந்து கொண்டதாக சிவகார்த்திகேயன் பேட்டியொன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த படங்கள்: சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி குறித்த மாறுபட்ட கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையின் வீடியோக்களை அடுத்தடுத்து இவர்கள் வெளியிட்டு வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இதனிடையே அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்க்ததில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் மற்றும் சுதா கொங்கரா படங்களிலும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X