கூப்பிடவே இல்லையாம்.. கமல் 60ல் ஆப்சென்ட்டானதற்கு காரணம் இதுதானாம்.. அப்செட்டான பிரபல ஹீரோ!
Recommended Video
சென்னை: கமல் 60 நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படாததால்தான் பிரபல நடிகர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கமலின் 65வது பிறந்தநாளை முன்னிட்டும் சினிமாவில் அவரின் 60 ஆண்டு சாதனையை பாராட்டியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கமலின் உங்கள் நான் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த், ஏஆர் ரஹ்மான், ஷங்கர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கமலின் படங்களுக்கு அதிகளவு இசையமைத்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் இளையராஜாவுடன் சேர்ந்து கமல்ஹாசனும் சில பாடல்களை பாடினார்.

பிரபலங்கள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் கமலுடன் இணைந்து நடித்த அக்கால இக்கால ஹீரோயின்கள் பலர் கலந்து கொண்டனர். ஜெயம் ரவி, கார்த்தி, விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு உள்ளிட்ட இளம் நடிகர்கள் மற்றும் சிவகுமார் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் ஏராளமான நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

கமலுடன் அனுபவம்
நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் வடிவேல் சிங்கார வேலன் மற்றும் தேவர் மகன் படத்தில் கமலுடன் இணைந்து நடித்த அனுபவங்களை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார். அவரை போலவே கமலுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை பலரும் பகிர்ந்து கொண்டனர்.

விஜய் அஜித்
தொடும் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் கமலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயும் அஜித்தும் பங்கேற்கவில்லை.

ஏன் பங்கேற்கவில்லை?
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

முன்னணி நடிகராக..
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் தனது திறமையால் ஹீரோவாக உயர்ந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

ரசிகர்கள் மூடவுட்
இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு கமல் 60 விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவர் அப்செட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்களும் மூடவுட்டில் இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











