Sivakarthikeyan: ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த சிவகார்த்திகேயன்.. எந்த தியேட்டர் தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ளது மாவீரன் படம். படத்தை இயக்கியுள்ளார் மடோன் அஸ்வின்.

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் அதிதி ஷங்கர். மேலும் மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Actor Sivakarthikeyan Joined with his fans for Maaveeran FDFS

இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ரசிகர்களுடன் இணைந்து மாவீரன் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மாவீரன் படம். படம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சிறப்பான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனாலும் ஒரே மாதிரியான காட்சிகள் மற்றும் பாடி ஷேமிங் காமெடிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு சில ரசிகர்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

Actor Sivakarthikeyan Joined with his fans for Maaveeran FDFS

இதுபோன்ற படத்தை மடோன் அஸ்வினிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளதாகவும் பேன்டசி படமாக சிறப்பாக அமைந்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் கடந்தப்படம் பிரின்ஸ் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான நிலையில் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சொதப்பியது. இந்நிலையில், இந்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. குறிப்பாக படத்தின் நாயகன் மற்றும் நாயகி சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் இணைந்து பாடியிருந்த வண்ணாரப்பேட்டையில பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. லிரிக் வீடியோவாக வெளியான இந்தப்பாடல் படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்தின்மூலம் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர் முதல் முறையாக இணைந்துள்ளார்.

Actor Sivakarthikeyan Joined with his fans for Maaveeran FDFS

மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக இணைந்துள்ளார். படத்தின் வெற்றிக்கு அவரது கெட்டப் மற்றும் உடல்மொழி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடிகை சரிதா நடித்துள்ளார். இவர்களது கேரக்டர்கள் குறித்தும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இவர்கள் இருவரும் சிவகார்த்திகேயனை குட்டி ரஜினிகாந்த் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் படம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் இணைந்து முதல் நாள் முதல் ஷோவை வெற்றி திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். முன்னதாக அவருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை கொடுத்திருந்தனர். இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகிறது. வழக்கம்போல தலையில் குல்லாவுடன் அவர் திரையரங்கிற்கு விசிட் செய்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X