Actor Sivakarthikeyan: மீண்டும் இணையும் டான் கூட்டணி.. ஆனா அவ்வளவு காலம் காத்திருக்கனுமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படம் டான். அட்லியின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மாஸான என்டர்டெயின்மெண்டை கொடுத்தது. முன்னதாக வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் வெற்றியை இந்த படம் சமப்படுத்தியது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்த பல்வேறு குழப்பங்கள் இருப்பதை இந்த படம் கதைக்களமாக கொண்டிருந்தது. படத்தில் சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், சூரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
அடுத்தடுத்து டாக்டர் மற்றும் டான் என இரு படங்களின் வெற்றியை சாத்தியப்படுத்தினார் சிவகார்த்திகேயன். இந்த இரு படங்களுமே 100 கோடி கிளப்பில் இணைந்து அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. தயாரிப்பாளராகவும் டான் மற்றும் டாக்டர் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான முறையில் கை கொடுத்தன. தொடர்ந்து பிரின்ஸ் படத்திலும் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். ஹாட்ரிக் வெற்றியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரின்ஸ் படம் சொதப்பியது. ஆனாலும் கல்லூரி மாணவராக நடித்திருந்த டான் படம் அவரது கேரியரில் எவர்கிரீன் படமாக அமைந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த சிறப்பான கதை தேர்வுகள் அவரது கேரியரை சரியான பாதையில் கொண்டு சென்று வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான அவரது டான் படம் அவருக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கை கொடுத்தது. அட்லியின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமுத்திரக்கனி, சூரி, பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கல்லூரிக்காலத்தில் காணப்படும் குறும்புத்தனங்கள், அடாவடியான நடவடிக்கைகளை இந்தப் படம் காட்சிப்படுத்தியது.
100 கோடி கிளப் படங்கள்: முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் அடுத்தடுத்த வெற்றிகள் அவருக்கு அதிகமான உற்சாகத்தை கொடுத்தது. தொடர்ந்து வெளியான பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயனுக்கு சொதப்பலான முடிவை கொடுத்தது. இருந்த போதிலும் சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான இயக்குநர்களுடன் கைகோர்த்து வருகிறார். இடையில் அவரது சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனங்களும் அவரது கேரியரை முடக்கும் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் அதிலிருந்து தற்போது மீண்டுள்ளார்.
மாவீரன் படம்: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான மாவீரன் படம் சிறப்பான வெற்றியை மீண்டும் சிவகார்த்திகேயன் கேரியரில் கொண்டு வந்து சேர்த்தது. இதனிடையே இந்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியான அயலான் படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் டான் கூட்டணி: எஸ்கே21 படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகாத நிலையில் வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டும் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் கோடை கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே மீண்டும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே இந்தக் கூட்டணி உறுதியான நிலையில் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில் சூட்டிங்: முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைய உள்ளார் சிபி சக்கரவர்த்தி. தற்போது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் இணைந்து வரும் சிவகார்த்திகேயன் அந்த கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு 2025-ஆம் ஆண்டில் தான் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











