அடடே அசத்தலான தகவல்.. சிம்பு பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்!
சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் டான். இத்திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காமெடி, அப்பா சென்டிமெண்ட்டுன் வெளியான இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது.

100 கோடி வசூலில்
கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. முன்னதாக வெளியான டாக்டர் படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பிரின்ஸ்
சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே 20 என பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரின்ஸ் என இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில்
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து சென்னை-28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கைவசம் ஏராளமான படங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 5 புதிய திரைப்படத்தை கைவசம் வைத்து இருக்கிறார். அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை, ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலா ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











