இனிமேல் மான் கராத்தே எல்லாம் கிடையாது.. ஸ்ட்ரெயிட்டா கராத்தேதான்.. சிவகார்த்திகேயன் பளீச்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்தடுத்த மாஸ் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
அடுத்தடுத்த வெற்றிப் படங்களை நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் வசூலில் மாஸ் காட்டின.
அடுத்ததாக வெளியான பிரின்ஸ் படம் சிறப்பாக அமையாத நிலையில், தற்போது மாவீரன் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த மாஸ் படங்களில் நடித்து வருகிறார். காமெடி களத்தில் தன்னை ஈடுபடுத்தி சிறப்பான படங்களை ஆரம்பத்தில் வெற்றிப்படங்களாக கொடுத்துவந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து தன்னுடைய கேரியரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு தற்போது மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து தன்னை சினிமாவில் உயர்த்திக் கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகள் சிறப்பானது.

பன்முகத் திறமை
பல கரடுமுரடான பாதைகளை அவர் கடந்து வந்துதான் தன்னுடைய பயணத்தை வெற்றிப்பாதையில் கொண்டு சென்று வருகிறார். தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் தன்னை பல்வேறு தளங்களில் பொருத்திவரும் சிவகார்த்திகேயன், முன்னதாக விஜய் டிவியின் ஆங்கரிங், மிமிக்ரி போன்ற திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் திறமைகளை அடித்தளமாகக் கொண்டே அவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

சிவகார்த்திகேயனின் திரைப்பயணம்
தனுஷுடன் 3 என்ற படத்தில் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு மெரினா படம் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இந்தப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் எல்லா படங்களுமே அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. ஒரு சில படங்கள் சொதப்பினாலும் அதிலிருந்து மீண்டு, மீண்டும் அதே பழைய உற்சாகத்துடன் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்து வருகிறார்.

சொதப்பிய பிரின்ஸ் படம்
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் டாக்டர், டான் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. அதே உற்சாகத்துடன் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் வகையில்தான் பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் சொதப்பியது. இதையடுத்து அவரது நடிப்பில் மாவீரன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷனை அவர் முடித்துள்ளார். இன்னும் சில தினங்களில் மொத்தப் படத்தின் சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாவீரன் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்
இந்தப் படத்தின் சூட்டிங்கை எடுக்க மிகவும் கடினமாக இருந்ததாகவும் ஆனால் கதைக்களம் மிகவும் ப்ரெஷ்ஷாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்ப படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து அயலான் படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

மான் கராத்தே எல்லாம் இல்லை
தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 1947 படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துக் கொண்ட சிவகார்த்திகேயனிடம் அவரது ரசிகர்கள் மான் கராத்தே போஸ் பண்ணும்படி கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், மான் கராத்தே எல்லாம் தாண்டி இவ்வளவு தூரம் வந்திருக்கேன், இனிமே எல்லாம் மான் கராத்தே கிடையாதுப்பா என்றும் அதான் மாவீரன் என்று சொல்லியாச்சு இல்லே, ஸ்ட்ரெயிட்டா கராத்தே தான் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











