நம்ம வீட்டு பிரின்ஸ்.. விஜய் டிவியில் தீபாவளி ஸ்பெஷல்.. ரசிகர்களை சந்திக்கும் சிவகார்த்திகேயன்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
படத்தின் ப்ரமோஷன்களில் சிவகார்த்திகேயன், மரியா, சூரி உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி கிளப்பில் இணைந்த டாக்டர், டான் படங்களை தொடர்ந்து அடுத்ததாக பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி வரும் 21ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா, சூரி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். படம் நாளை மறுநாள் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷனை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.

பிரின்ஸ் படத்தின் கதை
பிரிட்டனை சேர்ந்த பெண்ணின் காதலை பெறுவதற்காக இந்திய இளைஞனின் மெனக்கெடல்தான் இந்தப் படத்தின் கதைக்களம் என்று முன்னதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் மாறுபட்ட காமெடி களத்தில் கொண்டு சென்றுள்ளதாகவும் அதற்கான ரசிகர்களின் ரெஸ்பான்சை தெரிந்துக் கொள்ள தான் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்
இதனிடையே படத்தின் பிரமோஷனையொட்டி அடுத்தடுத்து பேட்டிகளையும் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியையும் படக்குழு நடத்தி முடித்துள்ளது. டாக்டர், டான் படங்களின் அதிரி புதிரி வெற்றிகளை தொடர்ந்து இந்தப் படத்தினை ஹாட்ரிக் வெற்றியாக்க சிவகார்த்திகேயன் தீவிரம் காட்டி வருகிறார்.

நம்ம வீட்டு பிரின்ஸ் நிகழ்ச்சி
அவரது அடுத்தடுத்து படங்களான மாவீரன், அயலான் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பிலும் சாய் பல்லவி ஜோடியாக அவர் அடுத்த படத்திலும் கமட்டாகியுள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் தீபாவளி செலபிரேஷனாக நம்ம வீட்டு பிரின்ஸ் நிகழ்ச்சியில் வரும் 24ம் தேதி பிரின்ஸ் படக்குழு பங்கேற்கவுள்ளது.

நடனமாடிய சிவகார்த்திகேயன்
இந்தப் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு பிறகு சத்யராஜும் இணைந்துள்ளார். இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் டயலாக்குகள் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நடனமும் ஆடினார்.

தீபாவளிக்கு ஒளிபரப்பு
ஒருத்தரின் வெற்றி ஒரு கூட்டத்தின் வெற்றியாக நினைக்கப்படுவது சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே சாத்தயப்படுவதாகவும் நிகழ்ச்சியில் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் மரியா, அனுதீப் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி வரும் 24ம் தேதி தீபாவளியன்று மதியம் 3.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











