சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் இவருடன்தான்... தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்ததாக பணியாற்றவுள்ள இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவ கார்த்திகேயன் தனுஷ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக அவரது நடிப்பில் டாக்டர் படம் வெளியானது.

ரிலீஸுக்கு தயார்
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள், சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் மற்றும் அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

தெலுங்கு படத்தில் எஸ்கே
மேலும் தெலுங்கு இயக்குநர் அனுதீப்புடன் இணைந்து நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

ராஜ்குமார் பெரியசாமியுடன்?
இதனை தொடர்ந்து ராட்சசன் பட இயக்குநரின் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது கவுதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஒப்புதல்
ராஜ்குமார் பெரியசாமியும் சிவகார்த்திகேயனும் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி, இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

கமல் தயாரிப்பில்?
சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மண்டேலா பட இயக்குநர் அஷ்வின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிங்கப்பாதை படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











