திமுகவில் இணையும் சிவகார்த்திகேயன்? முன்னாள் மத்திய அமைச்சருடன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு போட்டி?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார். தொடர்ந்து ஜனரஞ்சகமான கதைகளைத் தேர்வு செய்து குடும்ப ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ள நடிகராக உள்ளார். நாளுக்கு நாள் இவரது படங்களுக்கான வியாபாரம் என்பது அதிகரித்துக்கொண்டே உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அமரன். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இதையடுத்து இவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பொங்கலுக்கு படங்களைத் தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகின்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ பட்டியலில் தனது பெயரை இணைக்க முயற்சித்து வருகின்றார்.

Sivakarthikeyan DMK

இதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக உள்ள விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். விஜய் தனது 69வது படத்தில் நடித்த பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் களம் இறங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார். இப்படியான நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள திமுகவை எதிர்த்துதான் தனது அரசியலைத் தொடங்குகின்றார் விஜய். இதனால் விஜய்யின் இடத்தினை தமிழ் சினிமாவில் பிடிக்கவும் சிவகார்த்திகேயன் திட்டம் போட்டு வருகின்றார் என கூறப்படுகின்றது.

Sivakarthikeyan DMK

தவெக கொடி: இந்நிலையில் விஜய் நேற்று அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனைச் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தயாநிதி மாறனே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Sivakarthikeyan DMK

திமுகவில் எஸ்.கே: மேலும் அந்த எக்ஸ் பக்கப் பதிவில், " மிகவும் எளிமையான, இயல்பான மற்றும் அன்பான சிவகார்த்திகேயனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் சிவகார்த்திகேயன் திமுகவில் இணையவுள்ளார் என பேச ஆரம்பித்துள்ளனர்.

Sivakarthikeyan DMK

வாழை: சிவகார்த்திகேயன் கலாநிதி மாறனைச் சந்தித்திருந்தால் அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை எனக் கூறியிருக்கலாம். ஆனால் சிவகார்த்திகேயனும் தயாநிதி மாறனும் சந்தித்துள்ளதால் பலரும் சிவகார்த்திகேயன் திமுகவில் இணையவுள்ளார் எனக் கூறி வருகின்றனர். அதேபோல் பலரும் கொட்டுக்காளி படத்தினைப் பாராட்டவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறுகின்றனர். கொட்டுக்காளி படத்தினை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X