முதலமைச்சருடன் மீட்டிங் போட்ட எஸ்.கே.. திமுகவை விட எஸ்.கே வேகமா இருக்காரே? எல்லாம் அதுக்குத்தானா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார். தொடர்ந்து ஜனரஞ்சகமான கதைகளைத் தேர்வு செய்து குடும்ப ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ள நடிகராக உள்ளார். நாளுக்கு நாள் இவரது படங்களுக்கான வியாபாரம் என்பது அதிகரித்துக்கொண்டே உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அமரன். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

இதையடுத்து இவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பொங்கலுக்கு படங்களைத் தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகின்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ பட்டியலில் தனது பெயரை இணைக்க முயற்சித்து வருகின்றார்.

sivakarthikeyan mk stalin dmk

இதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக உள்ள விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். விஜய் தனது 69வது படத்தில் நடித்த பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் களம் இறங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார். இப்படியான நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள திமுகவை எதிர்த்துதான் தனது அரசியலைத் தொடங்குகின்றார் விஜய். இதனால் விஜய்யின் இடத்தினை தமிழ் சினிமாவில் பிடிக்கவும் சிவகார்த்திகேயன் திட்டம் போட்டு வருகின்றார் என கூறப்படுகின்றது.

தவெக விஜய்: இந்நிலையில் விஜய், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது கட்சியின் கொடி மற்றும் கொடி பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். திமுக ஆட்சியில் இருக்கும்போது விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதால் ஆட்சியில் இல்லாத அதிமுகவை விடவும், ஆட்சியில் உள்ள திமுகவை எதிர்த்து அதிகம் களமாடவேண்டி இருக்கும். சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலில் களமிறங்கும் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களில் குடும்ப ரசிகர்கள்தான் அதிகம். விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால், விஜய் எட்டிய உயரத்தை, ரசிகர்கள் மனதில் வியஜ் பிடித்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என கூறப்படுகின்றது.

sivakarthikeyan mk stalin dmk

முதலமைச்சர்: இப்படியான பேச்சுகள் திரையுலகைச் சுற்றிலும் இருக்கும் நிலையில், ஆட்சியில் உள்ள திமுக தனக்கு சாதகமாக காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனைச் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை தயாநிதி மாறனே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

sivakarthikeyan mk stalin dmk

திமுகவில் எஸ்.கே: மேலும் அந்த எக்ஸ் பக்கப் பதிவில், " மிகவும் எளிமையான, இயல்பான மற்றும் அன்பான சிவகார்த்திகேயனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தயாநிதி மாறன் பகிர்ந்த புகைப்படம், முதலமைச்சர் ஸ்டாலினை சிவகார்த்திகேயன் சந்தித்த வீடியோ ஆகியவற்றை பார்த்த திரைத்துறையினர் பலரும் சிவகார்த்திகேயன் திமுகவில் இணையவுள்ளார் என ஆணித்தரமாக பேச ஆரம்பித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் : மேலும் சிவகார்த்திகேயன் கலாநிதி மாறனைச் சந்தித்திருந்தால் அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை எனக் கூறியிருக்கலாம். ஆனால் சிவகார்த்திகேயன் நேரடியாக முதலமைச்சர் ஸ்டலின் மற்றும், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரைச் சந்தித்துள்ளதால் பலரும் சிவகார்த்திகேயன் திமுகவில் இணையவுள்ளார் எனக் கூறி வருகின்றனர். ஆனால் இந்தச் சந்திப்பு தொடர்பாக சிவகார்த்திகேயன் சமூக வலைதளப் பக்கத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

sivakarthikeyan mk stalin dmk

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X