twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “அந்த 60 நிமிடங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது“ .. ரஜினிகாந்தை சந்தித்த சிவகார்த்திகேயன்!

    |

    சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடித்த டான் திரைப்படம் மே 13ந் தேதி அன்று திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுஅனிருத் இசையமைத்திருந்த இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று, இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வருகிறது.

    மிடில் கிளாஸ், குழந்தைகள் மார்கெட்டை பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. உஷாரான விஜய்.. பக்கா பிளான்!மிடில் கிளாஸ், குழந்தைகள் மார்கெட்டை பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. உஷாரான விஜய்.. பக்கா பிளான்!

    டான்

    டான்

    அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவானத் திரைப்படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன், இவர்களுடன் சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்த படத்தில் கல்லூரி மாணவராக கலகலப்பான தோற்றத்தில் வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

    பாராட்டிய ரஜினி

    பாராட்டிய ரஜினி

    நல்ல படங்களையும், படத்தில் பணியாற்றிய குழுவினரையும் எப்போதும் பாராட்ட தவறாத சூப்பர் ஸ்டார், அட்லீயிடம் அசோசியேட்டாக பணியாற்றிய அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டான்' படத்தை பார்த்துவிட்டு "சூப்பர், மிக நல்ல நடிப்பு. 30 நிமிடங்களாக என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தார்.

    வாழ்க்கையில் மறக்க முடியாதது

    வாழ்க்கையில் மறக்க முடியாதது

    இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை சந்தித்து ஆசி பெற்றேன். அந்த 60 நிமிடங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. டான் படத்தைப் பாராட்டியதற்கும், எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கும் நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    Recommended Video

    SivaKarthikeyan என்ன சொன்னார் ? யார் மீதும் கோபம் இல்லை |Sivakarthikeyan|Filmibeat Tamil
    டோலிவுட்டில்

    டோலிவுட்டில்

    சிவகார்த்திகேயன் ரஜினிகாந்துடன் தலைவர்169 திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகின்றன. சிவகார்த்திகேயன் தற்போது, SK20 மற்றும் SK21 படங்களில் பிஸியாக உள்ளார். அனுதீப் இயக்கும் இந்த படம் மூலம் டோலிவுட்டுக்கு செல்கிறார் சிவகார்த்திகேயன்.

    English summary
    Sivakarthikeyan the lovable hero of Tamil cinema, Sivakarthikeyan emotional note sharing an awesome pic as well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X