மனச்சோர்வில் இருந்த எனக்கு சிகிச்சையாக மாறியது அதுதான்.. சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்த அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்தப்படம் வசூலிலும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் பயோ-பிக் படமாக வெளியான இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகி மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டியொன்றில் ரசிகர்களின் விசில் சத்தமும் கைதட்டல்களும் தான் தனக்கு மிக சிறந்த சிகிச்சை என்று தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்றுவரும் 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய அவர் இதை குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த படங்களில் தன்னை அவர் இணைத்து வருகிறார்.

sivakarthikeyan amaran movie goa film festival

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான அமரன் படம் மிகச் சிறப்பான தீபாவளி கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. படம் 20 நாட்களை தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை மையமாக வைத்து வெளியான இந்த படத்தின் கதைக்களம் ரசிகர்களை மிக சிறப்பாக கவர்ந்துள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் ஜோடி ரசிகர்களை கவர்ந்ததுடன் படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்துள்ளது.

அமரன் படம்: படம் பான் இந்தியா படமாக வெளியான நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி ரசிகர்களை மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும்நிலையில் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் மற்றும் சுதா கொங்கரா படங்களில் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இந்நிலையில் தற்போது கோவாவில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் பங்கேற்று சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

மனச்சோர்விற்கு சிகிச்சை: தன்னுடைய தந்தையின் அகால மரணம் வாழ்க்கையில் ஒரு சோர்வை ஏற்படுத்தியதாகவும் மனச்சோர்வில் தன் வேலைகளை செய்யத் துவங்கியபோது பார்வையாளர்களின் விசில்களும் அவர்களின் கைத்தட்டலும்தான் தனக்கு மிகச்சிறந்த சிகிச்சையாக மாறியதாகவும் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்து தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து ஏராளமான ரசிகர்களின் வரவேற்புடன் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நிலையில் இங்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நடிகர் பரத் பாராட்டு: அனைவரும் சிவகார்த்திகேயனை போல சக்சஸாக மாற நினைப்பதாகவும் ஆனால் அந்த இடத்திற்கு வருவதற்கு அவர் பட்ட சிரமங்கள் மிகவும் அதிகமானது என்றும் நடிகர் பரத்தும் சமீபத்தில் பேட்டியொன்றில் பேசியிருந்தார். அவரை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். விரைவில் சிபி சக்ரவர்த்தியுடன் இணையும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் அடுத்தப்படம் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X