Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம்.. பிரதீப்பிற்கு அடித்த லக்கி சான்ஸ்!
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் -இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIC படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.
பிரதீப் ரங்கநாதனுடன் இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி ஜோடியாகியுள்ள நிலையில் எஸ்ஜே சூர்யா முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன்: இயக்குநர் விக்னேஷ் சிவன் ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து அஜித்துடன் விக்னேஷ் சிவன் கூட்டணி உறுதியான நிலையில் அந்தப் படத்திலிருந்து சிலபல காரணங்களால் அவர் விலக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்தப்படத்தை சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.

டேட்ஸ் கொடுத்த பிரதீப்: பிரதீப் டேட்ஸ் கொடுத்துவிட்டதாக டேட்சுடன் வெளியான அந்த வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. இந்நிலையில் அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் பூஜையும் போடப்பட்டுள்ளது. இந்த பூஜை தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. செவன் ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. படத்தில் பிரதீபபிற ஜோடியாகியுள்ளார் கிருத்தி ஷெட்டி. மேலும் எஸ்ஜே சூர்யாவும் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
சயின்டிபிக் ரொமான்டிக் ஜானர்: சயின்டிபிக் ஜானரில் ரொமாண்டிக் காமெடி படமாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் படத்தின் பாடல்கள், பிஜிஎம் குறித்த அதிகமாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது துவங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்களை விரைவில் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்தப் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு உருவாக்கப்பட்ட கதைக்களம்: முன்னதாக இந்தப் படத்தின் கதையை நடிகர் சிவகார்த்திகேயனை மனதில் வைத்து விக்னேஷ் சிவன் எழுதியதாகவும் சிவகார்த்திகேயனின் 17வது படமாக இந்தப் படம் உருவாகவிருந்த நிலையில் படத்தின் அதிகமான பட்ஜெட் காரணமாக படம் டிராப் ஆனதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. லைகா இந்தப் படத்தை தயாரிக்கவிருந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டு கடந்த 2020ம் ஆண்டில் ரிலீஸ் செயப்படவிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதீப்பிற்கு அடித்த லக்கி சான்ஸ்: சிவகார்த்திகேயனுக்கான எழுதப்பட்ட இந்த ஸ்கிரிப்ட்டில்தான் தற்போது பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு எல்ஐசி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது படத்திற்கான அட்ராக்ஷனாக பார்க்கப்படுகிறது. படத்தில் அனிருத், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ, ரவிவர்மன், எஸ்ஜே சூர்யா, கிருத்தி ஷெட்டி என கலர்புல் காம்பினேஷன் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய காதலுக்காக 2023ம் ஆண்டிற்கு ஹீரோ டைம் டிராவல் மூலம் பயணம் செய்வதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் தற்போது கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











