Sivakarthikeyan: காஷ்மீரில் டைட் ஷெட்யூல்.. ஆனாலும் பிரமோஷனில் கலக்கும் சிவகார்த்திகேயன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாவீரன். இந்தப் படம் வரும் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

மண்டேலா புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.

Actor Sivakarthikeyan plans next to next promotions for Maaveeran movie

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

மாவீரன் படத்தின் ப்ரமோஷன்களில் பிசியான சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். பெரியவர் முதல் சிறுவர்கள் வரை அனைவரின் பேவரைட்டாக இருக்கும் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் என அடுத்தடுத்த படங்களின் சக்சஸை தொடர்ந்து சொதப்பலான பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார். டாக்டர், டான் படங்கள் அவருக்கு தயாரிப்பாளராகவும் கைக்கொடுத்த நிலையில், பிரின்ஸ் படமும் வெற்றிபெற்று ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருக்கு எப்போதும் கைக்கொடுக்கும் காமெடி கலந்த ஹீரோயிசத்தையே இந்தப் படத்திலும் அவர் கையிலெடுத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அதிதி ஷங்கர் ஜோடியாகியுள்ளார். தமிழில் இது அவருக்கு இரண்டாவது படம். மேலும் படத்தில் மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் ஜூலை 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதன் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காஷ்மீரிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் காஷ்மீர் சூட்டிங்கில் பங்கேற்க அடுத்த நாளே திரும்பினார்.

Actor Sivakarthikeyan plans next to next promotions for Maaveeran movie

காஷ்மீர் சூட்டிங்கில் பிசியாக இருந்தபோதிலும் மாவீரன் படத்தின் ப்ரமோஷன்களிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இன்றைய தினம் ஐதராபாத்திலும் நாளைய தினம் கொச்சி மற்றும் பெங்களூரிலும் திங்கட்கிழமை சென்னையில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் அவர் அடுத்தடுத்து பங்கேற்கவுள்ளார். இந்த சில தினங்கள் எஸ்கே21 சூட்டிங்கில் மற்ற நடிகர்களின் போர்ஷன்களை இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின், நடிகை சரிதா உள்ளிட்டவர்கள் சிவகார்த்திகேயனை குட்டி சூப்பர்ஸ்டார் என்று புகழ்ந்தனர். அந்த அளவிற்கு அவர் தன்னுடைய அமைதியான சுபாவம் மற்றும் தன்னுடைய தொழிலில் அதிகமான அக்கறையை காட்டி வருவதாகவும் தெரிவித்திருந்தனர். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது மாவீரன் ப்ரமோஷன்கள் மற்றும் எஸ்கே21 பட சூட்டிங் என சென்னைக்கும் காஷ்மீருக்கும் மாறி மாறி பறந்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X