கோர்த்துவிட்டேனா.. நெல்சனிடம் தளபதி 65 அப்டேட் கேட்டு விளையாடிய சிவகார்த்திகேயன்.. டிவிட்ட பாருங்க!
சென்னை: இயக்குநர் நெல்சன் திலிப்குமாரிடம் விஜய் படத்தின் அப்டேட்டை கேட்டு கோர்த்துவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன், நடிகர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.
பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது டாக்டர், அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

டான் பட அறிவிப்பு
இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது.

லைகா புரடெக்ஷன்
இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.

நெல்சன் வாழ்த்து
அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் சிவகார்த்தியேனை வைத்து டாக்டர் படத்தை இயக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எப்டி கோர்த்து விட்டேனா?
அதனை பார்த்த சிவகார்த்திகேயன், நன்றி ணா.. டாக்டர் அப்டேட் எதுவும் இல்லையா? என்றும் விஜய் சார் படம் அப்டேட் என்றும் கேள்விக் குறியுடன் கேட்டுள்ள சிவகார்த்திகேயன் பிராக்கெட்டில் எப்படி கோர்த்து விட்டேனா என்று பதிவிட்டுள்ளார்.

வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா?
இதனை பார்த்த இயக்குநர் நெல்சன், சிரித்துள்ளதோடு அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா என்றும் கேட்டுள்ளார். சிவகார்த்திகேயனும் நெல்சனும் இப்படி நகைச்சுவையாக பேசிக் கொண்ட பதிவுகளை ரசிகர்களும் அதிகளவில் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











