சதம் அடித்த அஷ்வின்.. புரோ நீங்க ஹீரோ புரோ.. பாராட்டித் தள்ளிய சிவகார்த்திகேயன்!

சென்னை: சதம் அடித்த கிரிக்கெட்டர் அஷ்வினை நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோ என புகழ்ந்த டிவிட் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதன் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

317 ரன்கள் வித்தியாசம்

317 ரன்கள் வித்தியாசம்

இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த இரண்டாவதுது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் அஷ்வின் தான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சிவகார்த்திகேயன் பாராட்டு

சிவகார்த்திகேயன் பாராட்டு


இதனை தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தில் அஷ்வினை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கிரிக்கெட்டர் அஷ்வினை பாராட்டியுள்ளார்.

நீங்க ஹீரோ புரோ

நீங்க ஹீரோ புரோ

இதுதொடர்பான அவரது டிவிட்டில் புரோ, நீங்க ஹீரோ புரோ.. இந்த பிட்சில் சதம் என்பது பார்க்க அற்புதமாக இருந்தது. இப்படியே தொடருங்கள். உத்வேகம் தரக்கூடிய இன்னும் பல தருணங்களை உங்களிடமிருந்து பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

அஷ்வின் நன்றி

அஷ்வின் நன்றி

இதனை பார்த்த கிரிக்கெட்டர் அஷ்வின் நன்றி புரோ என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த டிவிட்டுகள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X