வாவ்... விஜய்யின் மாஸ்டர் டீசர பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்யின் மாஸ்டர் டீசரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Recommended Video
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி எதிரெதிராக நடித்துள்ளனர்.
விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீஸாக வேண்டிய இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக இதுவரை ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போயுள்ளது.

ஜேடியாக விஜய்
வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. இதில் விஜய் ஜேடி என்ற கதாப்பாத்திரத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

குவியும் வியூஸ்
விஜய் சேதுபதி பவானி என்ற கேரக்டரில் வில்லனாக நடித்துள்ளார். இருவரும் நேருக்கு நேராக மோதும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. டீசரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் டீசர் லைக்ஸ்களையும் வியூஸ்களையும் குவித்து வருகிறது.

பட்டாசா இருக்கு..
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசரை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பட்டாசா இருக்கு மாஸ்டர் டீசர். தளபதி விஜய் சார், நம்முடைய ராக் ஸ்டார் அனிருத் விஜய்சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எல்லாரும் சிறப்பு.

38 ஆயிரம் லைக்ஸ்
மாஸ்டர் படம் வெற்றி பெற மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள்.. இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த வாழ்த்து பதிவு, சுமார் 38 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











