Maaveeran: அடுத்தடுத்த பிரமோஷன்கள்.. இன்னைக்கு மலேசியா.. நாளை துபாய்.. மாஸ் காட்டும் மாவீரன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

அவரது கடந்த படம் பிரின்ஸ் சொதப்பினாலும் முந்தைய படங்கள் டாக்டர் மற்றும் டான் படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் ஜோடியாகியுள்ளார்.

Actor Sivakarthikeyan promoting Maaveeran movie in Malaysia and Dubai

வெளிநாட்டிலும் சிறப்பான பிரமோஷனில் மாவீரன் டீம்: நடிகர் சிவகார்த்திகேயன் விஜேவாக தன்னுடைய கேரியரை துவக்கினாலும் தன்னுடைய சிறப்பான திறமை மற்றும் திட்டமிடல் மூலம் தற்போது சிறப்பான உயரத்தை பிடித்துள்ளார். கோலிவுட்டில் விஜய், அஜித்திற்கு அடுத்தப்படியாக முன்னணி ஹீரோவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார். அடுத்தடுத்த சிறப்பான வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சினிமாவில் நடிப்பை தவிர்த்து தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருகிறார்.

டாக்டர், டான் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில், அடுத்ததாக ஹாட்ரிக் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிரின்ஸ் படம் சொதப்பலான ரிசல்டையே கொடுத்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதற்கேற்ப படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கொச்சி, பெங்களூர் என அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டனர். இந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் ரசிகர்கள் அளவிற்கு மற்ற மாநில ரசிகர்களுக்கும் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தனர். முன்னதாக தமிழ் ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

தன்னுடைய மெரினா படத்தின் இசை வெளியீடு மெரினாவில் நடைபெற்றதாகவும் மொத்தமாக 50 பேர்தான் அந்த விழாவில் கலந்துக் கொண்டதாகவும் கூறிய சிவகார்த்திகேயன், மாவீரன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மாஸாக கலந்துக் கொண்ட ரசிகர்களை பார்த்து மிகுந்த உற்சாகமாக உள்ளதாக கூறியிருந்தார். அதேபோல மற்ற மாநிலங்களிலும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுவதை இந்த நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின.

Actor Sivakarthikeyan promoting Maaveeran movie in Malaysia and Dubai

இந்நிலையில் தென்னிந்திய அளவில் மட்டும் தன்னுடைய பிரமோஷன்களை நிறுத்திக் கொள்ளாமல் சர்வதேச அளவிலான ரசிகர்களையும் கவரும் வகையில், இன்றைய தினம் மலேசியாவிற்கு சிவகார்த்திகேயன் அண்ட் டீம் செல்லவுள்ளது. அங்கு ரசிகர்களை சந்திக்கும் சிவகார்த்திகேயன், நாளைய தினம் துபாய்க்கும் செல்லவுள்ளார். இந்நலையில் மலேசியா சென்ற சிவகார்த்திகேயனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இன்னும் இரு தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. முன்னதாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இன்றைய தினம் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன், சரிதா உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். அவர் செல்ஃபி எடுப்பதாக இந்தப் புகைப்படம் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X