சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் படம்... ட்ரெயிலர் வெளியீடு... ஓடிடியில் ரிலீஸ்

சென்னை : அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழ்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நேரடியாக ஓடிடியில் வரும் 16ம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஓடிடியில் ரிலீசாகும் வாழ்

ஓடிடியில் ரிலீசாகும் வாழ்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் மற்றும் அருணின் மதுரம் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் வாழ். அருவி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படைப்பாக வாழ் படம் உருவாகியுள்ளது. இந்த படம் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது.

சிவகார்த்திகேயன் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் அறிவிப்பு

வரும் 16ம் தேதி சோனி லைவ்வில் நேரடியாக வாழ் படம் ரிலீசாக உள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். மேலும் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை மாலையில் வெளியாக உள்ளதையும் குறிப்பிட்டிருந்தார்.

யூ/ஏ சான்றிதழ்

யூ/ஏ சான்றிதழ்

இதனிடையே வாழ் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டிஜே பானு, அஹ்ரவ், திவா தவான் மற்றும் நித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தின் சூட்டிங் கடந்த 2019லேயே முடிந்துள்ளது. படத்திற்கு சென்சார் தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Recommended Video

முன்னனி இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்த Sivakarthikeyan| Atlee, Sivakarthikeyan Garden, Aarti Baby
மாறுபட்ட கதை

மாறுபட்ட கதை

மியூசிகல் ட்ராவல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளதுடன் படத்திற்காக அவர் 10 பாடல்களை பாடியுள்ளதாக கூறப்படுகிறது. தனது அருவி படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X