Sivakarthikeyan: விஜய் துப்பாக்கியை கொடுக்கல.. அவர் கொடுத்ததே வேற.. சிவகார்த்திகேயன் சொன்னத பாருங்க
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய தீபாவளி கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. தீபாவளி கொண்டாட்ட நாளில் படம்பார்த்த ரசிகர்களை அமரன் டீம் அழ வைத்து விட்டதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் ஏறக்குறைய 200 கோடி ரூபாய்களை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இநத்ப் படம் எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்திலும் ரசிகர்களை கவர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதையொட்டி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் விஜய் கோட் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதில் விஜய் ரசிகர்களும் அடக்கம். கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை சிவகார்த்திகேயன் பெறுவதாக காட்சிகள் அமைந்திருந்தன. இது கோலிவுட்டில் தனக்கான இடத்தை விஜய் அடுத்ததாக சிவகார்த்திகேயனிடம் கொடுப்பதாக குறிப்பாக உணர்த்துவதாக விமர்சிக்கப்பட்டன.
விஜய்யின் கோட் படம்: இந்தப் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சிவகார்த்திகேயனின் இந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அமரன் படம் வெளியாகியுள்ள நிலையில், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விஜய்யின் கோட் படம் பெறத்தவறிய வரவேற்பு மற்றும் வசூலை அமரன் படம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் பெறுவது சாத்தியமே என்று பல்வேறு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஒரு வாரத்தில் அமரன் படத்தின் வசூல் 200 கோடிகளாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விஜய் கொடுத்ததே வேறு: இதன்மூலம் சிவகார்த்திகேயனின் தரம் கோலிவுட்டில் ஹீரோவாக மேலும் உயர்ந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோட் படத்தில் நடிகர் விஜய் தன்னிடம் கொடுத்தது துப்பாக்கி மட்டுமில்லை என்றும் அவர் தன்னுடைய அன்பை கொடுத்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய்யின் இடத்தை யாரும் தொடக்கூட முடியாது என்று கூறியுள்ள சிவகார்த்திகேயன், அவ்வளவு பெரிய ஸ்டார், இளம் தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்ததை தான் மிகவும் வியப்பாக பார்த்ததாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விஜய் இடத்தை பிடிக்க முடியாது: தன்னுடைய 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் திரைப்பயணத்தில் விஜய் அதிகமான பிரச்சினைகளையும் சவால்களையும் சந்தித்தே தற்போதைய நிலைக்கு வந்துள்ளதாகவும் அதை தான் நேரடியாக போய் பெற்றுவிட முடியாது என்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். கோட் படத்தின் தங்களது காம்பினேஷன் க்ளைமாக்ஸ் காட்சி எப்போதும் நினைத்து மகிழ்ச்சியடையும் வகையில் அமைந்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார், சுதா கொங்கரா உள்ளிட்டவர்களுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











