அயலான் ரிலீஸ் தாமதம் ஏன்னு தெரியுமா.. காரணம் சொன்ன சிவகார்த்திகேயன்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், தீபாவளியையொட்டி அவரது பிரின்ஸ் படம் ரிலீசாகவுள்ளது.
இதனிடையே அவரது மாவீரன், அயலான் படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் விஜேவாக இருந்து சினிமாவில் காமெடி நடிகராகத்தான் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அவருக்குள் இருக்கும் ஹீரோவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாண்டிராஜ். மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக மாற்றி ரசிகர்களுக்கு பரிட்சயப்படுத்தினார்.

கேரியர் பெஸ்ட் படங்கள்
இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியான அனைத்துப் படங்களுமே அவருக்கு ஏற்றத்தையே கொடுத்தது. குறிப்பாக ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன.

சிவகார்த்திகேயனின் பன்முகத் திறமை
இந்தப் படங்களை தொடர்ந்து தன்னை தயாரிப்பாளராகவும் மாற்றம் செய்துக் கொண்டார் சிவகார்த்திகேயன். ஆங்கர், காமெடியன், பாடகர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என்று இவரது பன்முகத் திறமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன.

தீபாவளிக்கு ரிலீசாகும் பிரின்ஸ்
இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தீபாவளியையொட்டி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை அதிகமாக ஈர்த்துள்ளது. காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த மரியா இணைந்துள்ளார்.

தாமதமாகும் அயலான் ரிலீஸ்
இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சயின்ஸ் பிக்ஷன் படமான அயலான் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்தப் படம்தான் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் படம் அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயலான் தாமதம் குறித்து சிவகார்த்திகேயன்
இதனிடையே இந்தப் படத்தின் தாமதம் குறித்து தற்போது தனது பேட்டியொன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். இதுபோன்ற ஜானரில் இதுவரை தமிழில் படங்கள் வந்ததில்லை என்று கூறியுள்ள சிவகார்த்திகேயன், அதனால் படத்தை சிறப்பான சிஜி வேலைகளை இணைத்து முழுமையாக கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் அயலான் அப்டேட்
படத்தின் சிஜி வேலைகள் காரணமாகவே ரிலீஸ் தாமதமாகி வருவதாகவும், இந்தப் படம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான உற்சாகமான அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











