Sivakarthikeyan: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரோல் இதுதான்.. வெளியான மாஸ் அப்டேட்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே23 படத்தில் இயக்குநர் ஏஆர் முருகதாசுடன் இணைவது உறுதியாகியுள்ளது.

தற்போது நடித்துவரும் எஸ்கே21 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஆர் முருகதாசுடன் இணையவுள்ளார் எஸ்கே.

இந்நிலையில் இந்தப் படத்தில் அவர் ஏற்று நடிக்கவுள்ள கேரக்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Actor Sivakarthikeyan Role in SK23 movie under Director AR Murugadoss revealed now

ஏஆர் முருகதாஸ் டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் கேரக்டர் வெளியானது: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாவீரன் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 80 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான கலெக்ஷனை குவித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்துடன் தற்போது எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் தொடர்ந்து 75 நாட்கள் எடுக்கப்பட்டன. கடுமையான குளிர் உள்ளிட்ட சூழலில் இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துவரும் சூழலில், படத்தில் இதையொட்டி போர்க்காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Sivakarthikeyan Role in SK23 movie under Director AR Murugadoss revealed now

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது எஸ்கே23 படத்திற்காக இயக்குநர் ஏஆர் முருகதாசுடன் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். நேற்றைய தினம் இயக்குநர் ஏஆர் முருகதாசின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பை சிவகார்த்திகேயன் மேற்கொண்டிருந்தார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கேட்டவுடன் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த ஏஆர் முருகதாஸ் இருவரும் இணைந்து மேஜிக் செய்வோம் என்று கூறியிருந்தார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் துப்பாக்கி படத்திற்கு இணையான அழுத்தமான கதைக்களத்துடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மிருணாள் தாக்கூர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த நடிகர், நடிகைகளின் அப்டேட் தொடர்ந்து வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை தெலுங்குப்பட தயாரிப்பாளர் என்வி பிரசாத் தயாரிக்கவுள்ளார்.

Actor Sivakarthikeyan Role in SK23 movie under Director AR Murugadoss revealed now

இதனிடையே, நேற்றைய தினம் ஏஆர் முருகதாசின் பிறந்தநாளை கேக் வெட்டி அவருடன் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சந்திப்பை அடுத்தே, படத்தின் அறிவிப்பையும் சிவகார்த்திகேயன் மேற்கொண்டிருந்தார். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X