பிரேம்ஜி வெளியிட்ட சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் மாஷ்அப் வீடியோ.. கோலிவுட்டின் பிரின்ஸ் என புகழ்ச்சி

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் பிரின்ஸ் என்று ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

அடுத்தடுத்து சிறப்பான படங்களை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கொடுத்து வருகிறார்.

தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். வரும் 17ம் தேதி இவரது பிறந்தநாளை சிறப்பாக்க ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

கோலிவுட்டின் பிரின்ஸ்

கோலிவுட்டின் பிரின்ஸ்

கோலிவுட்டின் பிரின்ஸ் என்ற பாராட்டிற்கு உரியவராக உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமையை கொண்டவராக உள்ள சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்டும் கூட. இந்த திறமையை கொண்டே, அவர் விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். ஆங்கராகவும் இருந்துள்ளார்.

விஜய் டிவி மூலம் சினிமா வாய்ப்பு

விஜய் டிவி மூலம் சினிமா வாய்ப்பு

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கிடைத்த அறிமுகத்தை மூலதனமாக கொண்டு, 3 படத்தில் காமெடியனாகவும் தொடர்ந்து மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்து தன்னுடைய வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டா சிவகார்த்திகேயன். குறுகிய காலகட்டத்தில் அவரது வளர்ச்சி அபரிமிதமாக இருந்தாலும், அதற்காக அவர் கடந்து வந்த பாதை எளிதானதல்ல.

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

தற்போது தயாரிப்பாளராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன். இவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான டாக்டர், டான் படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. தொடர்ந்து வெளியான பிரின்ஸ் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் பிக்ஷன் படமாக அயலான் உருவாகியுள்ளது. படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவீரன் என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்நிலையில் வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்

இதையொட்டி சிவகார்த்திகேயனின் மாஷ்-அப் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், நடிகர் பிரேம்ஜியும் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கோலிவுட்டின் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு


தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு காமெடி, டான்ஸ் என அனைத்தும் இயல்பாக வருவதே இவருடைய வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. அடுத்ததாக கமல் தயாரிப்பிலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் இவருக்கு சாய் பல்லவி ஜோடியாக நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X