அடுத்த படத்துக்கு தயாராகும் சிவகார்த்திகேயன்... 17ம் தேதி துவங்கும் டான் படத்தின் சூட்டிங்

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சிவாவின் டான் படத்தின் சூட்டிங் குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தந்தையான சிவகார்த்திகேயன் சில தினங்களிலேயே மீண்டும் டான் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார்.

டாக்டர் படம்

டாக்டர் படம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை திரைத்துறையில் காட்டி வருகிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தியவர் இவர். இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள டாக்டர் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

மீண்டும் சூட்டிங்

மீண்டும் சூட்டிங்

இரு தினங்களுக்கு முன்பு இவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு பிறகு தனது தந்தை தனது விரல் பிடித்துள்ளதாக இவர் எமோஷனல் ட்வீட்டை பதிவிட்டிருந்தார். இவருக்கு வாழ்த்துக்களும் ட்விட்டர் தளத்தில் குவிந்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் சூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார் சிவா.

மீண்டும் சூட்டிங்

மீண்டும் சூட்டிங்

கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது டான் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளது. வரும் 17ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் சென்னையில் மீண்டும் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை சிபி இயக்கிவரும் நிலையில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மீண்டும் சூட்டிங்

மீண்டும் சூட்டிங்

டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன் அவருக்கு ஜோடியாகியுள்ளார். எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தனது அடுத்த பயணத்தை துவங்கவுள்ளார். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X