Maaveeran :ஜூலை 2ம் தேதி நடக்கும் மாவீரன் ஆடியோ வெளியீடு.. எங்க நடக்குது தெரியுமா?
சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது மாவீரன் படம். தமிழ், தெலுங்கில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் அதிதி ஷங்கர்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது ஜூலை 14ம் தேதி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீடு குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

மாவீரன் படத்தின் இசை வெளியீடு : நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சுனில், சரிதா, யோகிபாபு, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாவீரன். டான், டாக்டர் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரின்ஸ் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இதனிடையே தற்போது மண்டேலா என்ற சிறப்பான படத்தை கொடுத்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் ஆகஸ்டில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயிலர், மாமன்னன் என அடுத்தடுத்த படங்களின் ரிலீசால், இந்தப் படத்தின் ரிலீஸ் முன்னதாக ஜூலை 14ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. முன்னதாக வெளியான இந்தப் படத்தின் பாடலும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியுள்ளது. பிரின்ஸ் படம் கொடுத்த பெரிய தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் அவரும் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றார். தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஜூலை 2ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சாய்ராம் இன்ஜினீயரிங் கல்லூரியில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ளவுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் பேசுவதை கேட்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்காலிகமாக எஸ்கே21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் சாய் பல்லவி. இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள நிலையில், காஷ்மீரில் 55 நாட்கள் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் சூட்டிங் சில நாட்கள் தடை பட்ட நிலையில் தற்போது சூட்டிங் துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











