Maaveeran :முழுமையாக நிறைவடைந்த மாவீரன் படத்தின் சூட்டிங்.. பேட்ச் வொர்க்கிற்கே இத்தனை நாட்களா?
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன்.
இந்தப் படத்தில் யோகிபாபு, மிஷ்கின், சுனில் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்த படத்தின் பேட்ச் வொர்க்கும் நிறைவடைந்து தற்போது படத்தின் சூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

மாவீரன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவு : நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சுனில், மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன். இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். கடந்த மாதத்திலேயே இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷனை சிவகார்த்திகேயன் முடித்துவிட்ட நிலையில், கடந்த ஒரு மாத காலமாக படத்தின் பேட்ச் வொர்க் தனியாக நடந்து வந்தது. இதில் சிவகார்த்திகேயன் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து படக்குழுவினர் சூட்டிங் நிறைவை கேக் வெட்டி கொண்டாடினர். ஜூலை 14ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் அடுத்தப்பாடல் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, படத்தின் டப்பிங் பணிகளை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் துவங்கியுள்ளனர்.

படத்தின் இரண்டாவது சிங்கிளுடன் படத்தின் டீசரும் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த வாரத்திலேயே வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் அதிதி ஷங்கர். இந்த காம்பினேஷன் தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே படத்தின் பேட்ச் வேலைகளே ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், படத்தில் யோகி பாபுவும் நடித்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மண்டேலா படத்தின் தொடர்ச்சியாக யோகி பாபு இந்தப் படத்தில் நடித்துள்ளதாகவும் படம் மடோன் சினிமாட்டிக் யூனிவர்சாக வெளியாகவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கமல் தயாரிப்பில் உருவாகிவரும் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனிடையே மாவீரன் படத்தின் டப்பிங் வேலைகளிலும் அவர் கவனம் செலுத்தவுள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அவர் ராணுவ வீரராக நடித்துவரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற உதயநிதியின் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டில் உடலை அதிகமாக ஏற்றிய நிலையில், தன்னுடைய ஹேர்ஸ்டைலை வெளிப்படுத்தாமல் அவர் பங்கேற்றிருந்தார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் வரை தன்னுடைய லுக்கை வெளிப்படுத்த வேண்டாம் என்று படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











