மாவீரன் படத்திற்காக பின்னி பெடலெடுக்கும் சிவகார்த்திகேயன்..ரெடியாகும் வேற லெவல் குத்து டான்ஸ்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் படம் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

டாக்டர், டான் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் படம் சொதப்பியது.

இந்நிலையில் தற்போது மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

 நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்த இரு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. இரண்டு படங்களும் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுத்தன. இந்த இரு படங்களை தொடர்ந்து பிரின்ஸ் படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சொதப்பிய பிரின்ஸ் படம்

சொதப்பிய பிரின்ஸ் படம்

ஆனால் கடந்த ஆண்டில் தீபாவளி ரிலீசாக வெளியான பிரின்ஸ் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வசூலிலும் சொதப்பியது. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றி என்ற கனவு பொய்த்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வருகிறது மாவீரன் படம்.

இறுதிக்கட்ட சூட்டிங்கில் மாவீரன் படம்

இறுதிக்கட்ட சூட்டிங்கில் மாவீரன் படம்

இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார். மிஷ்கின், சரிதா உள்ளிட்டவர்கள் படத்தின் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் மார்ச் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்

விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் பாடல் ஒன்று உடுக்கை மற்றும் ட்ரம் பீட்ஸுடன் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இந்தப் பாடலுக்காக நடனத்தில் சிவகார்த்திகேயன் பின்னி பெடலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டான்சிற்கு முக்கியத்துவம்

டான்சிற்கு முக்கியத்துவம்

விரைவில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் பாடல்தான் வெளியாகவுள்ளதா என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளனர். எப்போதுமே தன்னுடைய படங்களில் டான்சிற்கு சிவகார்த்திகேயன் முக்கியத்துவம் கொடுப்பார். அந்த வகையில் இந்தப்பாடலும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

காமெடி தூக்கலான படங்கள்

காமெடி தூக்கலான படங்கள்

சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையை காட்டி வருகிறார். முன்னதாக மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக இருந்து விஜய் டிவியின் பல ஷோக்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர் சிவகார்த்திகேயன். இவரது படங்களில் காமெடி தூக்கலாக இருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X