கெத்தா மெர்சலா சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்.. அட விருதையும் பக்கத்துல வச்சிருக்காரே!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து அதன்மூலம் சிறப்பான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இவரது டாக்டர், மற்றும் டான் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளன.
இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் படமும் வெளியாகவுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். மெரினாவில் துவங்கிய இவரது பயணம் தற்போது டாக்டர், டான் படங்களை கடந்து சைமா விருதில் வந்து நிற்கிறது. இவரது டாக்டர், டான் படங்கள் இவருக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கைக்கொடுத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம்
இவரது பிரின்ஸ் படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள், போஸ்டர்கள், பாடலுக்கான ப்ரமோ என அடுத்தடுத்த கலக்கல் வெளியீடுகளை படக்குழுவினர் வெளியிட்டனர். பிம்பிலிக்கு பிலாபி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனக்கேயுரிய காமெடியில் இந்தப் படத்தில் கலாட்டா செய்யவுள்ளார் சிவகார்த்திகேயன்.

டாக்டர் படத்திற்காக சைமா விருது
இதனிடையே சமீபத்தில் இவர் தன்னுடைய டாக்டர் படத்திற்காக சைமா விருதை பெற்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கெத்தாக கலந்துக் கொண்டு பரிசை பெற்றார் சிவகார்த்திகேயன். சிறந்த கதாநாயகனுக்காக இந்த விருதை அவர் பெற்றுள்ளார்.

4 விருதுகளை அள்ளிய டாக்டர்
நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தில் தன்னுடைய வழக்கத்திற்கு மாறான அமைதியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்திற்காக அவருக்கு விருது வழங்கப்பட்ட நிலையில் அதே படத்திற்காக பிரியங்கா மோகன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் தீபா ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்துள்ளன.

விருதுடன் கெத்தான போட்டோஷுட்
இந்நிலையில் இந்த விருதுடன் கெத்தாக போஸ் கொடுத்தபடி சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் கோட் சூட் சகிதமாக கிளாசான கெட்டப்புடன் சிவகார்த்திகேயன் காணப்படுகிறார்.

கோட் சூட்டில் போட்டோஷுட்
இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மகளுடன் இருக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டுவரும் சிவகார்த்திகேயன் முதல்முறையாக கோட் சூட்டில் போட்டோஷுட் நடத்தி அதனை வெளியிட்டுள்ளார். மெரூன் கலரில் கோட், ஒயிட் கலரில் சட்டை, பிளாக் கலரில் பேண்ட்டுடன் இந்தப் புகைப்படங்களில் அவர் காணப்படுகிறார்.

சைமா விருதுடன் போஸ்
மேலும் தான் வாங்கியுள்ள சைமா விருதுடனும் அவர் சிறப்பான வகையில் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் கன்னத்தில் கை வைத்தபடி எதையோ தீவிரமாக யோசிக்கும் முகபாவனையில் அவர் காணப்படுகிறார். இந்தப் புகைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே ஏராளமான ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











