சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் மொக்கையா?...ரசிகர்கள் கருத்து என்ன?

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

அனுதீப் இயக்கத்தில் வெளியாகியுள்ள பிரின்ஸ் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

தமன் இசையில் படத்தின் பாடல்கள், பின்னணி உள்ளிட்டவை ஸ்கோர் செய்துள்ளன.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற பிரம்மாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து இன்றைய தினம் பிரின்ஸ் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ளார். தெலுங்கில் இவரது முந்தைய படங்கள் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில் தமிழில் சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

தமிழ், தெலுங்கில் வெளியான பிரின்ஸ் படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்களையே ரசிகர்கள் கொடுத்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் படம் இல்லை என்றும் அனுதீப்பின் படமாகவே வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் திரையரங்குகளில் படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்த்தால் வந்து சிரித்துவிட்டு போகலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மிஸ்டர் லோக்கல் பார்ட் 2?

மிஸ்டர் லோக்கல் பார்ட் 2?

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் பார்ட் 2வாக படம் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தில் காமெடி அதிகமாக இருந்தாலும் ஆங்காங்கே வொர்க் அவுட் ஆகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியா -இங்கிலாந்துக்கு இடையிலான உறவை காமெடியாக சொல்லியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தியேட்டரில் தூங்கிய ரசிகர்கள்

தியேட்டரில் தூங்கிய ரசிகர்கள்

படத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது படக்குழுவினருக்கே தெரியவில்லை என்றும் படம் பார்க்க வந்தவர்கள் தியேட்டரில் தூங்கிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்ததாகவும் கொடுத்த காசு வேஸ்ட் என்றும் சிலர் கூறியதை பார்க்க முடிந்தது.

நடனத்தை இம்ப்ரூவ் செய்ய வேண்டும்

நடனத்தை இம்ப்ரூவ் செய்ய வேண்டும்

சிவகார்த்திகேயனின் படங்கள் எப்போதுமே நல்ல என்டர்டெயின்மெண்டை கொடுக்கும். ஆனால் இந்தப் படத்தில் அது தவறியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தன்னுடைய நடனத்தை மேலும் இம்ப்ரூவ் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். படத்தில் தமன் இசை நல்ல ஸ்கோர் செய்துள்ளதாகவும் அவர் மட்டுமே படத்தில் ஆறுதல் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹாட்ரிக் வெற்றி தவறியதா?

ஹாட்ரிக் வெற்றி தவறியதா?

மொத்தத்தில் டாக்டர், டான் படங்களை தொடர்ந்து இந்தப் படத்தை ஹாட்ரிக்காக சிவகார்த்திகேயன் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளதாகவே ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இனிவரும் நாட்களில் படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X