நாளை வெளியாகும் பிரின்ஸ் படத்தின் இரண்டாவது சிங்கிள்.. தொடர் ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயன்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் படங்களை வெற்றிப்படங்களாக்கி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் ஷைன் செய்துள்ளார்.
இவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகிவரும் நிலையில், வரும் தீபாவளியையொட்டி பிரின்ஸ் படம் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாடல் பிம்பிலிக்கி பிலாபி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் அதிரி புதிரி வெற்றியை கொடுத்து நிதி நெருக்கடியில் இருந்த சிவகார்த்திகேயனை விடுவித்ததாக தகவல்கள் வெளியாகின.

அடுத்தடுத்த படங்கள்
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது. இதையடுத்து அயலான் உள்ளிட்ட படங்களும் அவரது நடிப்பில் வெளியாகவுள்ளன. பிரின்ஸ் படத்தில் டீச்சராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிம்பிலிக்கி பிலாபி பாடல்
இந்தப் படத்தில் உக்ரைனை சேர்ந்த நடிகை மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார். இந்த ஜோடியின் கூட்டணியில் சமீபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியானது. பிம்பிலிக்கி பிலாபி என்ற இந்தப் பாடலில் சிவகார்த்திகேயனுடன் போட்டிப் போட்டு நடனமாடியிருந்தார் மரியா.

நாளை 2வது சிங்கிள் வெளியீடு
இதனிடையே இந்தப் படத்தின் ரிலீசுக்கு மற்றும் பிரமோஷன்களுக்கு படக்குழு திட்டமிட்டு வரும் சூழலில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ஜெசிக்காவை நாளைய தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு தற்போது அப்டேட் வெளியிட்டுள்ளது. நாளை மாலை 5.30 மணிக்கு இந்த சிங்கிள் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளார்.

வரவேற்பை பெற்ற முதல் பாடல்
கடந்த செப்டம்பர் 1ம் தேதி வெளியான இந்தப் படத்தின் முதல் பாடல் பிம்பிலிக்கி பிலாபி ஒரு கோடிக்கும் மேல் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்நிலையில் தமன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இரண்டாவது பாடல் எந்த மாதிரியான தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











