தமிழ் படத்தில் நடிக்க முன்பே தயாரான பிரின்ஸ் நாயகி.. அட இதெல்லாம் இவருக்கு சரளமா வருதே!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளைய தினம் பிரின்ஸ் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு மிகவும் இயல்பான ரொமாண்டிக் காமெடியை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் தற்போது படக்குழு மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நாளை ரிலீசாகும் பிரின்ஸ் படம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளைய தினம் பிரின்ஸ் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. முன்னதாக அவரது நடிப்பில் டாக்டர், டான் படங்கள் ஹிட்டடித்த நிலையில், பிரின்ஸ் படம் ஹாட்ரிக் வெற்றியடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த பிரமோஷன்கள்
பிரின்ஸ் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், சென்னை மற்றும் ஐதராபாத்தில் இதன் பிரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இதன் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஐதராபாத்திலும் நடந்துள்ளது. இதன் சிறப்பு விருந்தினராக நாகார்ஜூனா பங்கேற்றார்.

சிவகார்த்திகேயன் தொடர் பேட்டி
முன்னதாக விஜய் தேவரகொண்டாவும் இதன் பிரமோஷனில் பங்கேற்றுள்ளார். முன்னதாக படத்தின் ட்ரெயிலரை மாலத்தீவிலிருந்து விஜய் தேவரகொண்டா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நாளைய தினம் வெளியாகவுள்ள படத்தின் ரிலீசையொட்டி பல தளங்களில் பேட்டிகளையும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழு மேற்கொண்டு வருகிறது.

இளையராஜா பாடலை பாடிய மரியா
தற்போது ஐதராபாத்தில் பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ள படக்குழு தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் உக்ரைனை சேர்ந்த நாயகி மரியா அழகாக இளையராஜா, ஏஆர் ரஹ்மான் பாடல்களை பாடி அசத்தினார். இவர் இளையராஜா ரசிகை என்றும் நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் அசத்தல்
உக்ரைனில் போர் சூழ்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு இந்தியா வந்து இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ளார் மரியா. இதனிடையே இவர் இளையராஜாவின் ராஜா ராஜ சோழன் நான் என்ற பாடலை பாடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனிடையே அவரது மொழியில் சிவகார்த்திகேயனும் பாடல் பாடி அசத்தினார்.

பூங்காற்று திரும்புமா!
படத்தின் இயக்குநர் அனுதீப்பும் தீவிர இளையராஜா ரசிகர் என்று சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து சிவாஜி கணேசனின் முதல் மரியாதை படத்திலிருந்து பூங்காற்று திரும்புமா பாடலை அனுதீப் பாட, அந்த இடத்தில் அனைவரும் மௌனமாக அதை ரசித்து கைத்தட்டி வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











