மீண்டும் அந்த நடிகையா வேண்டவே வேண்டாம்… புது நடிகைக்கு ரூட்டுபோடும் சிவகார்த்திகேயன்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
டாக்டர் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் உச்சத்தை தொட்ட சிவகார்த்திகேயன் அடுத்ததாக மாவீரன், அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் மாவீரன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்
குழந்தைகளின் பேவரைட் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக டாக்டர், டான், பிரின்ஸ் திரைப்படங்கள் வெளியாகின. இதில், டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் நன்றாக கல்லாக்கட்டியது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து டான் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு திரையரங்கில் ஒடியது.

மாவீரன் படத்தின் மீது நம்பிக்கை
அதன் பிறகு பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சிவகாத்திகேயனின் மொத்த இமேஜையும் டேமேஜ் செய்துவிட்டது. இதனால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். ரசிகர்களும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

சிவகாத்திகேயனின் அடுத்த படம்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி நடிக்க இருப்பதாகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்பட்டு, வடமாநிலத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சினிமா வட்டாரத்தில் இருந்து நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

வேண்டவே வேண்டாம்
தற்பொழுது இந்த படத்திற்கு ஹீரோயின் தேடும் வேலை மும்முரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரியங்கா மோகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அவர் ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து விட்டதால், மீண்டும் அதே நடிகையா வேண்டவே வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீதா ராமம் பட நாயகி
அவருக்கு பதிலாக சீதாராமம் படத்தில் கதாநாயகியாக நடித்த மிருனாள் தாகூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சீதா ராமம் திரைப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மொழியில் கடந்த ஆண்டு வெளியாகி வசூலை அள்ளியது. இதிர்ல துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருனாள் தாகூர் நடித்திருந்தார். தற்போது இவரை நேரடியான தமிழ் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications