sivakarthikeyan salary: பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: 'பராசக்தி' என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டத்தில் இருந்தே. இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. அதற்கு காரணம் படத்தின் பெயர் தான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, சேத்தன் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் பராசக்தி. இந்த படத்தின் கதையை இதற்கு முன்பாக சூர்யாவிடம் சொல்லப்பட்டது. கதையை கேட்ட சூர்யா, படத்தை தவிர்த்து விட்டார். இந்தி திணிப்பு போராட்டத்தை கொண்ட கதைக்களமாக இருப்பதால், இந்த படத்தை சூர்யா தவிர்த்துவிட்டார் என பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. இதையடுத்து, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டானார். பராசக்தி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இந்த படம் எப்படி இருக்கும் என பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது வந்தன.

பராசக்தி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, படத்தின் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 10ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததால், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? வெளியாகாதா? என்ற குழப்பம் நிலவிய நிலையில் கடைசி நேரத்தில், தணிக்கை குழு 25 'கட்'கள் போடப்பட்டு U/A சான்றிதழ் அளித்தபின் இன்று படம் வெளியானது. 60 காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்த இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் செழியன் என்ற கதாபாத்திரத்தில், போராளியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக படம் பார்த்த அனைவரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
சிவகார்த்திகேயன் சம்பளம்: இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல். அதாவது , இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் நடிக்க ரூ. 30 கோடி சம்பளம் + Profit Share கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











