டான் படத்துல பெரிய மாஸ் சீன் எல்லாம் இருக்காது... ஆனால் இயல்பான கதை இருக்கும்... சிவா பளீச்

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் மே மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது டான் படம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. இதன்மூலம் அவர் உற்சாகமாக தற்போது அடுத்தடுத்த படங்களை எதிர்கொண்டு வருகிறார். தற்போது அவரது நடிப்பில் டான் படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்

இந்தப் படத்தின் பிரமோஷன்களில் தற்போது சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். மேலும் அவருடன் பிரியங்கா மோகன், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, பாலமுருகன் உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிகமாக மெனக்கெடவில்லை

அதிகமாக மெனக்கெடவில்லை

கல்லூரி மாணவராக சிவா நடித்துள்ள நிலையில், அதற்காக தான் அதிகமாக மெனக்கெடவில்லை என்று சமீபத்தில் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதற்கென உடலை குறைப்பது உள்ளிட்ட எந்த முயற்சிகளையும் தான் செய்யவில்லை என்றும் தன்னுடைய சின்ன சின்ன மாற்றங்களையும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியிடமே தான் விட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டான் மாஸ் படமில்லை

டான் மாஸ் படமில்லை

இந்தப் படத்தையும் தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் அவர் தயாரித்துள்ளார். மேலும் அவர் தனது பேட்டியில் இந்தப் படம் மாஸ் படமாக அதிரடியெல்லாம் காட்டாது என்றும் ஒரு நண்பர் பக்கத்தில் அமர்ந்து அவரது வாழ்க்கை குறித்த அனுபவத்தை பேசுவது போல படம் பார்ப்பவர்களுக்கு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கல்லூரி மாணவனின் பயணம்

கல்லூரி மாணவனின் பயணம்

ஒரு கல்லூரி மாணவனின் அடுத்தடுத்த பயணங்கள் குறித்த கதையை இயல்பாக எடுத்துள்ளதாகவும் படத்தில் சண்டைக் காட்சிகள் இருந்தபோதிலும் அதிரடியாக எல்லாம் இல்லாமல் இயல்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதனால்தான் படத்தின் டைட்டிலை மாசாக வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X