முதல்ல உங்க வாழ்க்கையை கொண்டாடுங்க.. லைஃப் சீக்ரெட் சொன்ன சிவகார்த்திகேயன்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இதையொட்டி நேற்று மாலை பிரின்ஸ் படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த நிகழ்ச்சியில் கதையின் நாயகி மரியா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

 நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் அதிரடி சரவெடியாக வெளியானது டாக்டர் மற்றும் டான் படங்கள். இந்த இரண்டு படங்களிலும் வித்தியாசமான ஜானர்களில் டாக்டராகவும் கல்லூரி மாணவனாகவும் நடித்து அதிரடியை கிளப்பியிருந்தார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான இந்த படங்கள் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.

ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருப்பு

ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருப்பு

இதையடுத்து ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் படம் வரும் தீபாவளியையொட்டி அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலரை நேற்றைய தினம் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். படத்தில் வாத்தியாராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் உக்ரைனை சேர்ந்த நடிகை மரியா.

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ட்ரெயிலர்

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ட்ரெயிலர்

இவர்களின் கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. பிரின்ஸ் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், நேற்றைய தினம் தெலுங்கு படத்தின் ட்ரெயிலரை மாலத்தீவில் இருந்தபடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

 வாழ்க்கையை கொண்டாடுங்க

வாழ்க்கையை கொண்டாடுங்க

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், முதல்ல உங்க வாழ்க்கையை கொண்டாடுங்க, அப்புறமா உங்களோட குடும்பத்தை கொண்டாடுங்க, அதுக்கு அப்புறமா என்னை கொண்டாடுங்க என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிச்சா வெற்றிதான் என்றும் அடுத்தவனை என்ன பண்ணலாம்னு யோசிச்சா ஒண்ணும் கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.

 விரைவில் Who Are You பாடல்

விரைவில் Who Are You பாடல்

படத்தின் அடுத்த சிங்கிள் Who Are You விரைவில் ரிலீசாக உள்ளதாகவும், நாயகனை பார்த்து ஹீரோயின் Who are you என்று கேட்பதாகவும் அதையடுத்து இந்தப் பாடல் வரும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே அடுத்ததாக தன்னுடைய மாவீரன் படம் ரிலீசாக உள்ளதாகவும் தொடர்ந்து அயலான் படம் வெளியாகும் என்றும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார்.

பாராட்டிய சூப்பர்ஸ்டார்

பாராட்டிய சூப்பர்ஸ்டார்

தன்னுடைய டான் படத்தை பார்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியதை நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயன், குறிப்பாக படத்தில் தன்னுடைய நடனத்தை பார்த்து, ஐயோ சிவா ரொம்ப நல்லா டான்ஸ் பண்ணியிருக்கீங்கன்னு சொன்னாரு என்றும் சிவகார்த்திகேயன் ரஜினி வாய்சிலேயே மேடையில் பேசி ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X