சிவகார்த்திகேயனின் SK20.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா ?
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK20 படத்தின் தலைப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 31-ந் தேதி ஆதாவது விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் முதல் படமும் இதுதான்.

டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் டான். இத்திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காமெடி, அப்பா சென்டிமெண்ட்டுன் வெளியான இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது.

100 கோடி வசூலில்
கடந்த மாதம் 13-ந் தேதி வெளியான இது படம் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. முன்னதாக வெளியான டாக்டர் படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

SK20
சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே 20 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்
இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகியுள்ளது. படத்தில் பள்ளி ஆசிரியராக சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படும் நிலையில், படத்திற்கு 'பிரின்ஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயன் உலக உருண்டையுடன் அமர்ந்து இருப்பது போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கைவசம் ஏராளமான படங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 5 புதிய திரைப்படத்தை கைவசம் வைத்து இருக்கிறார். அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை, ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலா ஒரு படம் என ஏராளமாக படங்களை கைவசம் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











