சினிமாவை விட்டு என்னைக்கோ போய் இருப்பேன்.. சிவகார்த்திகேயன் பேச்சு!

சென்னை: சினிமாவை விட்டு என்றைக்கோ விலகியிருப்பேன் இன்னும் சினிமாவில் நீடிப்பதற்கு காரணமே மனைவிதான் என்று நடிகர் சிவகார்த்திகேயன் மகுடம் 2024 விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

தனியார் தொலைக்காட்சி துறை கல்வி, மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு, இலக்கியம், திரைத்துறை என, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை சிறந்து விளங்குவோரை கண்டறிந்து, ஆண்டுதோறும் மகுடம் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இந்த விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அரசியல் ஆளுமைகள், நீதியரசர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

Sivakarthikeyan Dhanush kottukkaali

நடிகர் சிவகார்த்திகேயன்: இதில், மனம் கவர்ந்த நட்சத்திரம் விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேசிய, சிவகார்த்திகேயன், நான் சினிமாவை விட்டு என்றைக்கோ விலகி இருப்பேன், நான் இருப்பதற்கு காரணம் என் மனைவி தான், அவர் சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கலாம் என்று கூறாமல் படம் தயாரிக்கலாம் என்கிறார், கொட்டுக்காளி படத்தை தயாரிக்க இதுதான் காரணம். உண்மையில் அந்த படத்தை தயாரித்தது எனக்கு திருப்தியை தருகிறது.

நானும் ரசிகை: தற்போது அமரன் படத்தில் நடித்து வருகிறேன், அந்த படம் பவர் ஃபுல் படமாக இருக்கும். ஒரு வீரனின் உன்னதமான வாழ்க்கையை பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறோம். சினிமாவை நான் தான் அடுத்த இடத்திற்கு கொண்டு செல்கிறேன் என்ற சொல்ல மாட்டேன். ஏன் என்றால் அதற்கு பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் என்றார். இந்த விருதினை சிவகார்த்திகேயனுக்கு வழங்கிய குஷ்பு, சிவகார்த்திகேயன் இந்த இடத்திற்கு வந்தததற்கு காரணம் அவரது உழைப்பு. நானும் உங்கள் ரசிகை என்றார்.

நன்றி மறந்துவிட்டார்: இரண்டு தினத்திற்கு முன் சிவகார்த்திகேயன், கொட்டுக்காளி என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பேசினார். அதில், "பலர் எனக்கு வாழ்க்கை கொடுத்ததாகச் சொல்லி பழகிவிட்டனர். நான் அதுபோல் இல்லை." என்று தெரிவித்திருந்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள், தனுஷ் உதவியதை மறந்துவிட்டு நன்றி இல்லாமல் சிவகார்த்திகேயன் பேசிகிறார் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக, தனுஷ் தனக்கு வாய்ப்பு அளித்ததாக அவர் கூறும் வீடியோக்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X