Sivakarthikeyan: டிவிட்டரில் இருந்து திடீரென விலகிய சிவகார்த்திகேயன்... என்ன இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது.

மாவீரனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

 Actor Sivakarthikeyan taking a break from Twitter

இந்நிலையில், சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிவகார்த்திகேயன், திடீரென டிவிட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டிவிட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்
சின்ன திரையான விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் ஹீரோவாக என்ட்ரியான சிவகார்த்திகேயன், தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். கடந்தாண்டு டாக்டர், டான், பிரின்ஸ் என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாகின.

 Actor Sivakarthikeyan taking a break from Twitter

இந்நிலையில், இந்தாண்டும் சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான் படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன், ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல், அயலான் படமும் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த அயலான், இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. மாவீரன், அயலான் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிவகார்த்திகேயன், திடீரென டிவிட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 Actor Sivakarthikeyan taking a break from Twitter

இதுகுறித்து டிவிட் செய்துள்ள சிவகார்த்திகேயன், "அன்பான சகோதரர்கள், சகோதரிகளுக்கு... டிவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெறுகிறேன், விரைவில் திரும்பி வருவேன்... டேக் கேர்" என பதிவிட்டுள்ளார். மேலும், என்னுடைய படங்களின் அப்டேட்களை எனது டீம் இங்கே ஷேர் செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திடீரென சிவகார்த்திகேயன் டிவிட்டரில் இருந்து ஓய்வு பெறுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் திடீரென டிவிட்டரை விட்டு விலகியதை போல, தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக மாவீரன், அயலான் படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், டிவிட்டரில் இருந்து விலகுவது ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X