Amaran: விஜய் கொடுத்த துப்பாக்கி.. சரியா ஹேண்டில் பண்ணனும் - அமரன் விழாவில் எஸ்.கே மாஸ் பேச்சு!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது அயராத உழைப்பினால் உயர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சின்னத்திரையில் தான் சேர்த்து வைத்திருந்த ரசிகர்கள் பட்டாளத்தையும் தனது திறமையும் நம்பி வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலருக்கு உத்வேகமாக இருக்கின்றது எனக் கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அமரன். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படக்குழுவினர் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். சாய் பல்லவி கதாநாயகியா நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றது.

sivakarthikeyan amaran goat

இந்நிலையில் சென்னையில் இன்று அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற படக்குழுவினர் அறிமுக விழா விழாவில், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், துப்பாக்கியின் கனம் எப்படி உள்ளது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சிவக்கார்த்திகேயனோ, " துப்பாக்கி கனமா தான் இருக்கும் அத கரெக்ட்டா ஹேண்டில் பண்ணனும்" என மாஸாக பதில் அளித்தார்.

sivakarthikeyan amaran goat

துப்பாக்கி: சிவகார்த்திகேயனது இந்த பேச்சு அவரது ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சியாக்கியுள்ளது. காராணம், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில், 'விஜய் சிவகார்த்திகேயனிடம், துப்பாக்கிய புடிங்க சிவா' எனக் கூறுவார். இந்த காட்சி விஜய் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு அரசியலுக்குச் செல்கின்றார்' எனக் கூறப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் இவ்வாறு பேசியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

sivakarthikeyan amaran goat

அடுத்த படம்: இதை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி ஸ்வந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கேமியோ செய்கின்றார் என்றும் துப்பாக்கி படத்தில் மாஸான வில்லனாக வந்த வித்யுத் ஜம்வால் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கின்றார்.

கமல்: இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய உலக நாயகன் கமல் ஹாசன் சிலரது கண்களைப் பார்த்தாலே போது அவர்களிடம் திறமை உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளமுடியும் எனக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X